அமைச்சர் மரிய வில்சன்.. இங்கிலாந்தின் அரசர் அல்ல! ஆஜராக மாட்டாரா? - உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரியில் தனது அண்ணனின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
தவெகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது

இங்கிலாந்து அரசர் அல்ல
வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராணயணன், அமைச்சர் மரிய வில்சனின் வழக்கறிஞரை கடுமையாக சாடினார். நரசிம் ராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் நீதிமன்றத்தை நேரில் ஆஜரானதை நீதிபதி சுட்டடிக்காட்டினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நீதிபதி கூறியிருக்கிறார். அமைச்சராவதற்கு முன் ஆஜரானவர், அமைச்சரானதற்கு பின்னர் ஆஜராக மாட்டாரா? நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல! என்று நீதிபதி அமைச்சர் தரப்பை கண்டித்திருக்கிறார்.
என்ன நடந்தது?
கடந்த 2022ம் ஆண்டு ஆக.8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மரிய வில்சனின் அண்ணன் மரிய குலோத் மற்றும் அரவது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குடும்ப சொத்து தகராறு காரணமாக இந்த தாக்குதலில் மரிய வில்சன் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதவை உடைத்து அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கி.. கொலை மிரட்டல் விடுத்தார் என்பதுதான் புகார்.
புகார் மற்றும் விசாரணை
இந்த சம்பவம் தொர்பாக மரிய குலோத் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் சாதாரண பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் தாக்குதல் தொடர்பான ஆதராங்களை நீதிமன்றத்தில் காட்டி.. அதற்கேற்ற சரியான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மரிய குலோத் தரப்பு கேட்டுக்கொண்டது. பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து கடுமயான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்த உயர்நீதிமன்றம், வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டிருந்தது. சமரச தீர்வு மையத்தில் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இரு தரப்பினர் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. கடைசியாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சரமாரி கேள்வி
எனவே வேறு வழியின்றி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மரிய வில்சன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
வழக்கின் தகுதி மற்றும் ஆதராங்களின் அடிப்படையில் மனுவை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம நீதிபதி வி.லட்சுமிநாராணயணன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல என்று சாடியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
