சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விளையாட்டுத்துறையில் சிக்ஸர்களை விளாசும் அமைச்சர் மெய்யநாதன்! பரபரக்கும் அதிகாரிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது துறையில் காட்டும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் அவருக்கு முதல்வரிடத்தில் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

விளையாட்டுத்துறை தானே என்று விளையாட்டாக கருதாமல் அதனையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.

இதனிடையே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள் பற்றி ஆய்வு நடத்தி அதிகாரிகள் மத்தியில் அவர் கூறியதாவது;

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

''முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையினால் உலகமே வியக்கும் வகையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்திட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் போட்டி நடைபெறுவதையொட்டி மைதானம், பார்வையாளர்கள் இருக்கைகள், குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.''

சர்வதேச தரத்தில் பயிற்சிகள்

சர்வதேச தரத்தில் பயிற்சிகள்

''சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும், நமது வீரர்கள் அனைத்து சர்வதேச விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும், பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சாதனை படைக்கின்ற வகையில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.''

209 தொகுதிகளில்

209 தொகுதிகளில்

''தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி வாரியாக விளையாட்டு அரங்கங்கள் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மாநிலத்தில் 209 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைத்திடவும், முதற்கட்டமாக இந்த ஆண்டு 10 இடங்களில் அரங்கங்கள் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4 ஒலிம்பிக் அகாடமிகள், சென்னைக்கு அருகில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

என்னென்ன தேவைகள்

என்னென்ன தேவைகள்

''மேலும், பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி, முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது தொடர்பாக விபர அறிக்கை உடனடியாக தயாரிக்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதிகளை எந்தவித குறைபாடுமின்றி பராமரிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்துடன், முறையான பயிற்சி மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும். ''

English summary
International Women's Tennis Tournament:விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது துறையில் காட்டும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் அவருக்கு முதல்வரிடத்தில் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X