அடி தூள்... பொங்கல், புளியோதரை, லட்டு...10 கோவில்களில் பிரசாதம் இலவசம் - சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வடபழனி முருகன் கோயில் உள்பட 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கியது.
சென்னை: பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, லட்டு, பஞ்சாமிர்தம் தரும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். வடபழனி முருகன் கோயில், திருச்செந்தூர், பழனி, திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி கோயில்களில் பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது.
Recommended Video
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு லட்டு, புளியோதரை, பொங்கல், தயிர் சாதம் வழங்கப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலை போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கோவில் பிரசாதங்கள்
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் அந்த கோவிலில் இருக்கும் கடவுளுக்கும் இடையில் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும். பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். கணபதிக்கு பிடித்தமானது சர்க்கரைப்பொங்கல், மோதகம், அவல், கொண்டைக்கடலை, அப்பம். அழகன் முருகனுக்கு பிடித்தமானது வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, தினை மாவு, பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவை படைக்கலாம். சாமிக்கு படையலிடப்பட்ட பிரசாதங்கள் கோவில்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதை பலராலும் வாங்கி சாப்பிட முடிவதில்லை.

அமைச்சர் பி.கே. சேகர் பாபு
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மொட்டை இலவசம், 3 வேளை உணவு அன்னதானமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் சேகர்பாபு.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கோவில்களில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பசும் பால், லட்டு இலவசம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்த காய்ச்சிய பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான லட்டுகள் இதற்காக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

10 கோவில்களில் பிரசாதம் இலவசம்
இந்த நிலையில் வடபழனி முருகன் கோயில், திருச்செந்தூர், பழனி, திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி கோயில்களில் பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று வடபழனி முருகன் கோவிலில் தொடங்கி வைத்துள்ளார். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வயிறார அன்னதானம் சாப்பிடுவதோடு பிரசாதத்தையும் இலவசமாக வாங்கிச் செல்லலாம் என பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications