இரவோடு இரவாக.. பிடிஆர் செய்த தரமான மூவ்.. அப்படியே ஸ்டன் ஆகி நின்ற விஜய்.. தவெக ஷாக்காயிடுச்சே!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்த நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதற்குமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். சனிக்கிழமை இரவு விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவருக்கு, விமான நிலையச் சாலை நெடுகிலும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
ஸ்டாலின் மதுரை பிளான்
இப் பயணத்தின் முக்கிய அம்சமாக 'வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை' அவர் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரூ. 2,630.88 கோடி மதிப்பில் நிறைவுற்ற 63 திட்டங்களை முதலமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூ. 17.17 கோடி மதிப்பிலான ஏழு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டி சிறப்பிக்கவுள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு மாபெரும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 1,41,049 பயனாளிகளுக்குப் பல்வேறு நல உதவிகள் வழங்கப்படும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 63,698 பேருக்கு நிலப் பட்டாக்களும், பல்வேறு துறைகளின் சார்பில் 77,351 பேருக்கு அரசு நலன்களும் இதில் அடங்கும்.
ஸ்டாலின் மதுரை திட்டங்கள்
மேலமடையில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தின் திறப்பு விழா முக்கியமான நிகழ்வாக அமைகிறது. ரூ. 150.28 கோடி செலவில், 950 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிவகங்கையை மீட்டெடுத்த வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவாக 'வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பூவந்தி செல்லும் ரிங் ரோட்டில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மேலமடை சந்திப்பை இணைக்கும் இச்சாலையில், மேம்பாலம் வழியாகப் போக்குவரத்து திசை திருப்பப்படுவதால் நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக கனரக வாகனங்கள் மற்றும் பல கல்வி நிறுவனங்களால் இந்தப் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்தது.
இன்று பிற்பகலில், 'IDA ஸ்கடர் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில்' முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அப்போது 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, சிப்காட் வளாகத்தில் உள்ள பெரியார் குடிநீர் திட்டம் உள்ளிட்ட நிறைவடைந்த திட்டங்களையும் அவர் திறந்து வைப்பார்.
பிடிஆர் வரவேற்பு
இந்த நிலையில்தான் மதுரைக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்த நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வருகை தந்த கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அவர்களை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன், என்று கூறி உள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
கடந்த சில நாட்களாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியில் இருக்கிறார். திமுக மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் திமுகவில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
லீக்கான ஆடியோ என்று கூறப்பட்ட ஆடியோ ஒன்றில் இருந்தே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒதுக்கப்படுகிறார். அவர் தவெக செல்வார் என்று கூறப்பட்டது. இதை தவெக நிர்வாகிகளே தீவிரமாக பரப்பி வந்தனர். இதை எல்லாம் உடைத்து நொறுக்கும் விதமாக, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரவேற்றது கவனம் பெற்றுள்ளது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications