கேளுங்க மக்களே, ஸ்டாலின் காங்கிரஸில் சேர போறாராம்.. ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் வந்துருச்சாம்
முக ஸ்டாலின் காங்கிரசில் சேர போகிறார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: "நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லை.. ஸ்டாலின் காங்கிரசில்தான் சேர போகிறார்.. எனக்கு தகவல் கிடைச்சிருக்கு" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்னும் 25 வருஷத்தில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று ஏதோ பாசம் மற்றும் ஆர்வ கோளாறில் துரைமுருகன் சொல்லிவிட்டார்.

ஆனால் அதற்கும் கவுண்ட்டர் தந்து பதில் தர அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் முடியும். செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போவதாக நான் ஏற்கனவே சொன்னேன். இப்போது அது உண்மையாகிவிட்டது.
ஏனென்றால் "ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ எதுவா இருந்தாலும் நான் காங்கிரஸில் சேர்ந்துவிடுகிறேன், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துங்கள்" என்று ஸ்டாலினே காங்கிரஸ் தரப்பில் கேட்டு கொண்டதாக எனக்கு தகவல் வந்துவிட்டது.
அதைதான் உங்களுக்கு 2 நாளைக்கு முன்னாடியே சொன்னேன். நான் விசாரிச்ச வரைக்கும் அந்த தகவல் உண்மைன்னுதான் சொல்றாங்க.
அதுக்கேத்தபடி, துரைமுருகனும், ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று சொல்லிவிட்டார். அதனால் ஸ்டாலின் ஜனாதிபதியா மட்டுமில்லை.. அமெரிக்க அதிபராகக் கூட வரட்டும், அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலை இல்லை. அவர் தமிழ்நாட்டை விட்டுப் போனால் சரிதான்" என்றார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications