அமைச்சர் நாசர் மகன் பதவி பறிப்பு.. 5 மாதங்களிலேயே மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்த தலைமை!
அமைச்சர் நாசர் மகன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.எம். நாசரின் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் ஆவடி மாநகர திமுக செயலாளராக செயல்பட்டு வந்த ஆசிம் ராஜா 5 மாதங்களிலேயே மாற்றப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் மகன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நாசர் மகன்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

பொறுப்பிலிருந்து விடுவிப்பு
இந்த நிலையில் ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

போலீசில் புகார்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாகச் சென்று அகற்றியதாக சமீபத்தில் பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பாஜக புகார்
மேலும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழ்நாடு காவல்துறை உடனே கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது












Click it and Unblock the Notifications