துயரம் பருப்பான துவரம் பருப்பு.. பஞ்சாயத்தைக் கூட்டிய வானதி! பத்தே வரியில் பதிலடி கொடுத்த அமைச்சர்!
சென்னை: ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது அறிக்கையை படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரேசன் கடைகளில் துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரலில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக டெண்டர் பிரச்சினை எழுந்ததாக கூறப்பட்டது.
இதன் காரணமாகவே ஆங்காங்கே சில இடங்களில் துவரம் பருப்பு பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை உடனடியாக சரி செய்துள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் பாமாயில் பருப்பு பொது மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் விளக்கம் அளித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்," தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தனது அறிக்கையை வானதி படிக்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்,"துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று 14/10/24 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளேன். என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்கள்.
அவரின் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பியுள்ளேன். அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 20408000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 9783000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications