சென்னையில் எம்ஜிஆர், சிவாஜி நடித்த நாடக கொட்டகை ஆக்கிரமிப்பு.. மீட்க அமைச்சர் சேகர் பாபு உறுதி
சென்னை: வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சென்னை மநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து வால்டாகஸ் சாலையில் உள்ள யானைகவுணி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வட கிழக்கு பருவ மழைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை மன்னடியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை மீட்க கோரிக்கை விடித்துள்ளோம் உடனடியாக மீட்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் உறிதியளித்துள்ளார். யானைகவுனி மேம்பாலம் விரைவில் சரி செய்யப்படும். மேம்பாலம் சரி செய்யப்படும், என்று கூறிய உள்ள அவர் அங்கு உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று கூறினார்.
வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். தற்போது இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உதவிடன் இந்த இடம் மீட்கப்பட்டு பொதுமக்கள் படன்படும் திட்டங்களுக்கு இந்த இடம் மாற்றப்படும்.
10 ஆண்டுகளில் முன்னெச்சரிக்கை எடுத்தது உண்டு, ஆனால் தற்போது முதலமைச்சரே நேரில் கடந்த காலங்களில் தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களை சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். வடகிழக்கு பருவமழைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு சென்னை மாநகராட்சியில் முழுவதுமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்குவதை ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் விரைவில் திட்டங்கள் தீட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் எங்கேனும் முறையாக தூர்வாரப்படாமல் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வால்டாக்ஸ் சாலையில் பகுதி பக்கிங்காம் கால்வாயில் 5 முகத்துவாரத்தில் 2 தான் செயல்படுகிறது அனைத்தும் செயல்பட வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களை மழை காலத்தில் பொதுமக்களை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மயானங்களில் லஞ்சம் வாங்கப்படுவதில்லை என்றும் கடந்த லஞ்சம் வாங்குவது குறித்து புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications