Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புது நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்.." வந்து விழுந்த கேள்வி.. இரண்டே வரியில் பதிலளித்த சேகர்பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டின் கோயில் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தைத் தான் குறிப்பிடுவார்கள். அதன்படி நமது நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்ட நாடாளுமன்றம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது.

Minister Sekar Babu says Sengol in new parliament representing Tamil culture

இப்போது நமது நாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இங்கே இடவசதி போதுமானதாக இல்லை உள்ளிட்ட பல புகார்கள் இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதற்கு அருகே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கொரோனா காலத்திலும் இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. திட்டமிட்ட காலத்திற்குள் நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாடாளுமன்ற கட்டிடம்:

ஏற்கனவே, சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபோக நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது என்றும் குடியரசுத் தலைவரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சுமார் 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் என்று சமீபத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இது நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழர்களைச் சேர்ந்த ஆதீனத்தால் வழங்கப்பட்டது. இதைத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.

சேகர்பாபு:

இதற்கிடையே இது குறித்து அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-2024 நிதியாண்டின் அறிவித்தபடி ஆவடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்தே உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு மத்திய அரசுடனான விஷயங்களில் இயங்கி வருகிறோம்... சமீபத்தில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போதும் முதல்வர் இதைத்தான் தெளிவாகக் கூறியிருந்தார்.

Minister Sekar Babu says Sengol in new parliament representing Tamil culture

தமிழ்நாட்டில் செய்யப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது. அதேநேரம் நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும். இது தான் திமுகவின் நிலைப்பாடு.. குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதே ஏற்புடையதாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+