சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு.. அடுத்து சிக்கப்போவது யார்?.. அமைச்சர் சேகர்பாபு சூசகம்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோயில்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், கடைகள், தீயணைப்பு வாகன நிறுத்துமிடம், ஆம்புலன்ஸ், யானைகள் பராமரிப்பு இடம், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இறைவன் சொத்து இறைவனுக்கே... 2 நாட்களில் குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு இறைவன் சொத்து இறைவனுக்கே... 2 நாட்களில் குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூர் கோயில்

இந்த கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருச்செந்தூர் கோயிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டடங்களை கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கீழ்தளம்

கீழ்தளம்

அன்னதானக் கூடத்தின் கீழ்தளம், முதல் தளம் என ஒரே நேரத்தில் 1000 பேர் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில் டிவி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

யாரும் நெருங்க முடியாத இடம்

யாரும் நெருங்க முடியாத இடம்

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது. இன்னும் 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு நெருங்க முடியாத இடமென்று எதுவுமில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Recommended Video

    சரியான களம் அமைந்தால் சக்ஸஸ்தான்… அமைச்சர் சேகர்பாபு உறுதி
    நிச்சயம் தண்டனை

    நிச்சயம் தண்டனை

    தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய 4 பேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியுள்ளது.

    English summary
    Minister Sekar Babu says about if anything wrong in ex minister's portfolio then he will be investigated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X