வாந்தி, மயக்கம்.. புழல் சிறையிலிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மதியம் முதல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது 10ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது நீதிமன்றக் காவல் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
5 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது உடல் நிலையை காரணம் கூறி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் கடந்த அக்டோபர் 19ஆம் தள்ளுபடி செய்தது.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்ப்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் எனவும் செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிடப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் கால் மரத்து போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சனை இருந்து வருவதாக குறிப்பிட்டார். மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் காட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 20ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். மதிய உணவு சாப்பிட்டதிலிருந்து அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் அவர் வழக்கமான பரிசோதனைகள் முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்கிறார்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications