செந்தில் பாலாஜிக்கு காவேரியில் பைபாஸ் ஆபரேசன்..5 மணி நேரம் நடந்தது என்ன?..எத்தனை நாள் ஓய்வு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலையில் தொடங்கிய பைபாஸ் ஆபரேசன் காலை 10.15 மணிக்கு நிறைவடைந்தது. இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேசன் நடைபெற்றது. 5 மணி நேரம் ஆபரேசன் நடைபெற்று நிலையில் மாலையில்தான் செந்தில் பாலாஜி கண் விழிப்பார் என்றும் அவருக்கு 1 வார காலம் ஓய்வு தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இதய பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வேண்டும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை கோர்டு அனுமதி அளித்தது. ஆனால் அவரை விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை கூறியிருந்தது.
21ஆம் தேரி புதன்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். அதிகாலை 4 மணிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் மருத்துவர் காண்கணிப்பில் இருந்த செந்தில்பாலாஜி ஆபரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டார். அதிகாலை 5.15 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேசன் தொடங்கியது. இதய மருத்துவர் ரகுராம் தலைமையிலான குழுவினர் பைபாஸ் ஆபரேசன் செய்தனர். அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய பைபாஸ் ஆபரேசன் காலை 10.15 மணிக்கு நிறைவடைந்தது. ஆபரேசன் நிறைவடைந்தாலும் செந்தில் பாலாஜி மாலையில்தான் கண் விழிப்பார் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், இன்றைய தினம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
5 மணி நேரம் ஆபரேசன் முடிந்த பிறகு செந்தில் பாலாஜி 1 வார காலம் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இதய ஆபரேசன் நடைபெற்றுள்ளதால் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப 3 மாத காலங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications