சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பர் 1.. தமிழ்நாடுதான் "EV" கேப்பிட்டல்.. எலான் மஸ்க்கிற்கு டேட்டாவோடு அழைப்பு விடுத்த "தங்கம்"!

Google Oneindia Tamil News

சென்னை: மின்சார வாகனங்கள் தயாரிப்பது தொடர்பான மொத்த திட்டமிடப்பட்ட முதலீடுகளில் தமிழகத்தின் பங்கு 34 சதவீதம் என்பதால் டெஸ்லா கார் தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குங்கள் என சிஇஓ எலான் மஸ்கிற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருப்பதால் இதற்கு டெட்ராய்டு ஆஃப் சென்னை என்ற ஒரு பெயர் உண்டு. போர்டு, ரெனால்ட் நிசான், ஹூண்டாய், ஃபோர்டு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் 5:ஏற்கனவே கமலுக்காக நான் இதை செய்துள்ளேன்..உண்மையை உடைத்த ராஜு பிக் பாஸ் தமிழ் 5:ஏற்கனவே கமலுக்காக நான் இதை செய்துள்ளேன்..உண்மையை உடைத்த ராஜு

இதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை அமைக்க எலான் மஸ்க் முயன்று வருகிறார். இந்த நிலையில் எலான் மஸ்கிடம் நெட்டிசன் ஒருவர் இந்தியாவில் டெஸ்லாவை எப்போது தொடங்குவீர்கள் என்பது குறித்து ஏதேனும் தகவல் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சவால்கள்

சவால்கள்

இதற்கு எலான் மஸ்க், நிறைய சவால்களுடன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து டெஸ்லாவை தங்கள் மாநிலங்களில் தொடங்குமாறு தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அது போல் தமிழகத்தில் அமைக்குமாறு மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா கேட்டுள்ளார்.

தமிழகத்திற்கு வருக

தமிழகத்திற்கு வருக

இந்தியாவின் டெட்ராய்டான தமிழகத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம் எலான் மஸ்க். தமிழகத்தில் தொழிற்சாலையை அமைப்பது மிகவும் எளிதான காரியம். நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள், எல்லா சவால்களிலிருந்தும் மீள எங்களது அதி திறமைவாய்ந்த இளைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வேண்டாம்

தமிழகத்தில் வேண்டாம்

இவரது ட்விட்டரை பார்த்து நிறைய நெட்டிசன்கள் டெஸ்லாவை தமிழகத்தில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிலர் வேண்டாம் என அறிவுரையும் வழங்கியுள்ளனர். அதில் ஒருவர் எலான் மஸ்க், எங்கள் தமிழகத்தில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்க ஃபாக்ஸ்கான், நோக்கியா, போர்டு, ஹூண்டாய் உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களிடம் இருந்து மதிப்பாய்வு பெற்றுக் கொண்டு வாருங்கள். இவையெல்லாம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

திமுக அரசுடன் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மாநில நலன் என வரும் போது டிஆர்பி ராஜாவின் முன் முயற்சியை நான் ஆதரிப்பேன். எலான் மஸ்க் அவர்களே தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். இந்தியாவிலேயே அதிக முதலீட்டாளர்கள் எளிதில் தொழில் தொடங்கும் மாநிலம் தமிழகம்தான் என்கிறார் இந்த வலைஞர்.

தொழில் தொடங்க

தொழில் தொடங்க

அசோக் எல்லுசாமி சென்னையை சேர்ந்தவர்தான். அதனால் சென்னையில் தொழில் தொடங்க அவரும் உதவலாம் என்கிறார் இந்த வலைஞர்.

பாக்ஸ்கான்

பாக்ஸ்கான்

தமிழகத்தில் ஸ்டெர்லைட் மற்றும் பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் நிலை என்ன என அவருக்கு தெரியுமா? புதிய முதலீடுகளை கேட்பதற்கு முன்னர் அதை சரி செய்யுங்கள். வெளிநாட்டு முதலீட்டாளர் முன்பு நாடு பிரிவினையை நான் விரும்பவில்லை என்கிறார்.

தமிழகம்

தமிழகம்

ஆட்டோமொபைல் நிறுவன முதலீடுகளுக்கு தமிழகம்தான் சிறந்த மாநிலம். இதை உலக நாடுகள் அறியும். டெஸ்லாவை தமிழகத்தில் அமையுங்கள். மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் தோளோடு தோள் கொடுத்து பணியாற்றுங்கள் என்கிறார் இந்த வலைஞர்.

Recommended Video

    Elon musks level 5 self-driving cars! Dojos revolution | OneIndia Tamil
    ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    எலான் மஸ்க் தமிழகத்தில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது சரியான முடிவாக இருக்கும். ஏற்கெனவே ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு சிறப்பான பாதை உள்ளன என்கிறார் எலான் மஸ்க்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு

    அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு

    அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் மின்சார வாகனங்கள் தயாரிப்பது தொடர்பான மொத்த திட்டமிடப்பட்ட முதலீடுகளில் தமிழகத்தின் பங்கு 34 சதவீதம் ஆகும். இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி தலைநகர் தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். உலகின் 9 முன்னணி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தைகளில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Minister Thangam Thennarasu invites Tesla CEO Elon Musk to invest in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X