உற்சாகப்பானத்திற்கு பதில் ஊட்டச்சத்து பானம்! வீரபாண்டியார் அறிவித்ததை பரிசீலிப்போம் -தங்கம் தென்னரசு
சென்னை: முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் முந்திரி விளைச்சலுக்கு பெயர்பெற்ற பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் முந்திரி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பாக அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது தென் ஆப்ரிக்காவை போல் தமிழகத்திலும் முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

திமுக ஆட்சிக்காலம்
மேலும், கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் இதே கோரிக்கையை தாம் முன் வைத்ததன் காரணமாக சிறப்பு குழு ஒன்றை கோவாவுக்கு அனுப்பி அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியும், அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகமும் ஆய்வு செய்ய வைத்தார்கள் எனவும் பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார் வேல்முருகன்.

முந்திரி பழங்கள்
கோவாவில் மது தயாரிப்புக்காக முந்திரி பழங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் நாம் அது போல் செய்யாமல் தென் ஆப்ரிக்காவை போல் முந்திரி பழங்களில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கலாமே என்ற யோசனையையும் அளித்தார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்சாகப்பானத்திற்கு இல்லாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிக்கவாவது தொழிற்சாலை அமைக்கக்கோரும் வேல்முருகனின் கோரிக்கையை பரிசிலீத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறைந்த அமைச்சர்
மேலும், மறைந்த அமைச்சர் வீரபாண்டி அறுமுகம் இது தொடர்பாக 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிவிப்பையும், அவர் முன்னெடுத்த பணிகளையும் கவனத்தில் கொண்டு முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது பற்றி வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications