ஆண் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்கணும்! பெண்களுக்கு பகுத்தறிவு ரொம்ப முக்கியம்! உதயநிதி அட்வைஸ்!
ஆண் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என உதயநிதி அறிவுரை.
சென்னை: பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ஆண் பிள்ளைகளையும் பெற்றோர் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் அளித்துள்ளார்.
அது மட்டுமல்ல பெண்களுக்கு பகுத்தறிவு ரொம்ப முக்கியம் என்றும் எது உண்மை எது பொய் என்பதை பெண்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஒரே ஒரு நாளை மட்டும் மகளிர் தினமாக கொண்டாடுவதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் அவர் பேசியதாவது;

உதயநிதி ஸ்டாலின்
வருடத்தில் ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வருடம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் மகளிருக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி, பெண்கள் கல்வி பயிலும் வகையில் புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.

ஆண் பிள்ளைகள்
பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ஆண் பிள்ளைகளையும் பெற்றோர் பொறுப்பாக வளர்க்க வேண்டும். அது மட்டுமல்ல பெண்களுக்கு பகுத்தறிவு ரொம்ப முக்கியம், எது உண்மை எது பொய் என்பதை பெண்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரே ஒரு நாளை மட்டும் மகளிர் தினமாக கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை, என்னை பொறுத்தவரை வருடம் முழுவதும் பெண்கள் தினமாக தான் பார்க்கிறேன்.

தன்னம்பிக்கை
மேலும் பேசிய அவர் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். பேப்பரை பார்த்து படிக்காமல், பேசுவதற்கு திக்கித் திணறாமல் சரளமாக நகைச்சுவையாக உதயநிதி பேசியதால் அவருக்கு கைதட்டல் அள்ளியது. தனது தாத்தா கருணாநிதியை போல் இடத்திற்கேற்ப இருக்கக் கூடிய ஆட்களுக்கு ஏற்ப பேசி தாம் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் உதயநிதி.

மிகுந்த வரவேற்பு
முன்பைக் காட்டிலும் இப்போது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மக்கள் மத்தியில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் மிகவும் இயல்பான பேச்சு வழக்கில் இவர் பேசுவது தான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications