தூக்கமில்லை.. இரவு முழுக்க களத்தில் நின்ற உதயநிதி! வேளச்சேரியில் நடுஇரவில் கேட்ட குரல்.. என்ன இது?
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை நேற்று நள்ளிரவு நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.
சென்னையில் கனமழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றால் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகள்தான். இந்த பகுதிகளில்தான் தற்போது மீட்பு பணிகள் அவசியம் ஆகிறது. மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இந்த பகுதிகளில்தான் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று இரவு சென்னையில் வேளச்சேரி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இரவு முழுக்க தூங்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். நள்ளிரவில் வேளச்சேரி பகுதிக்கு சென்று அங்கே சிக்கி இருந்த மக்களுக்கு உதவிகளை செய்தார். அமைச்சர் உதயநிதியை கண்டதும் மக்கள் பலர் அங்கே கூடி.. மின்சாரம் , பால் தொடர்பான கோரிக்கைகளை வைத்தனர். கையில் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர்.. பால் தட்டுப்பாடு குறித்த கோரிக்கைகளை வைத்தார்.
மீட்பு பணிகள்: சென்னையில் அரசு செய்யும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் 30 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நம் மாநகரையும் - மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணிகளை கழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், மழை நீர் சூழ்ந்ததால் அவதிக்குள்ளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி - பிரட் போன்ற உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இன்று வழங்கினோம்.
சற்றுமுன் ஐந்து பர்லாங் சாலை பள்ளத்தில் கன்டெய்னரில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்... pic.twitter.com/d6DCbgkTzT
— Subramanian.Ma (@Subramanian_ma) December 5, 2023
வங்கக் கடலில் உருவான #CycloneMichuang காரணத்தால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது. மழை - வெள்ளத்தின் போது மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மின் சேவை மீண்டும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் மின் தடை நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறியதால், சாந்தோமில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, மின்சாரத்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசி, மின்தடைக்கான காரணத்தை கேட்டறிந்து, விரைந்து மின் விநியோகம் வழங்குமாறு வலியுறுத்தினோம்.
மேலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இத்தகைய சூழலில், நம் தொகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் வட்டம் 120, திருவல்லிக்கேணி பகுதி, கஜபதி தெரு - இராஜாஜி நகரைச் சேர்ந்தோருக்கு அரிசி - பால் உள்ளிட்ட உணவுப்பொருட்களை இன்று வழங்கினோம். அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என எடுத்துரைத்தோம்.
சென்னையில் 30 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நம் மாநகரையும் - மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணிகளை கழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், மழை நீர் சூழ்ந்ததால் அவதிக்குள்ளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி - பிரட் போன்ற உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இன்று வழங்கினோம்,. என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications