சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்றரை மணி நேரம் காத்திருந்து வாழ்த்திய அமைச்சர்கள்.. களைகட்டிய உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு, அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் முதல்வர் வீட்டில் வைத்து அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம், தாமதமான போதிலும்கூட காத்திருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து விட்டுச் சென்றனர்.

திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது, 44வது, பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 உதயநிதி பிறந்த நாள்... கட் அவுட்,பேனர்கள் வைத்தால் கட்சியில் இருந்து கட்டம்- ஸ்டாலின் கறார் உத்தரவு! உதயநிதி பிறந்த நாள்... கட் அவுட்,பேனர்கள் வைத்தால் கட்சியில் இருந்து கட்டம்- ஸ்டாலின் கறார் உத்தரவு!

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

இதையொட்டி இளைஞரணி நிர்வாகிகள் மாநிலம் முழுக்க பெருமளவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஏற்பாடு செய்தனர். ஆனால் மழை வெள்ள பாதிப்புகள் இருப்பதால் இப்போது ஆடம்பரமாக எதுவும் செய்ய வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்.

பட்டாசு வேண்டாம்

பட்டாசு வேண்டாம்

இதையடுத்து பட்டாசு வெடிப்பது, பேனர்கள் வைப்பது போன்ற ஏற்பாடுகளை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வது, ஆடைகள் வழங்குவது, கோவில்களில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்வது போன்ற பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காத்திருந்த அமைச்சர்கள்

காத்திருந்த அமைச்சர்கள்

இருப்பினும் சில அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சிலர் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து குவிய ஆரம்பித்தனர். உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து வாழ்த்து தெரிவிக்க அவர்கள் காத்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் அங்கு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தார் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இந்த விஷயங்களை தெரிவித்தனர்.

அமைச்சர்கள் வாழ்த்துக்கள்

அமைச்சர்கள் வாழ்த்துக்கள்

சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்தார். அது வரை காத்திருந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதன் பிறகு அங்கிருந்து கிளம்பி வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு ஊருக்கு சென்று நலத்திட்ட பணிகளை தொடருங்கள் அது தான் முக்கியம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது சில முக்கிய பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களிலும் திமுக ஆதரவாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

English summary
Udhayanidhi Stalin birthday: DMK MLAs and ministers meets Udhayanidhi Stalin after waiting for for more than an hour and wishing him a happy birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X