அந்த நாள் ஞாபகம் வந்ததே அண்ணனே! தமிமுன் அன்சாரியை வாசல் வரை வந்து வழியனுப்பிய வைகோ!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது முடிந்தவரை அரசியல் பேசுவதை தவிர்த்த வைகோவிடம், கடந்த காலத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டது, மது ஒழிப்பு போராட்டத்தை இணைந்தது முன்னெடுத்தது என பழைய நினைவலைகளை மட்டும் பகிர்ந்திருக்கிறார் தமிமுன் அன்சாரி.
இதனால் உற்சாகமடைந்த வைகோ சுமார் அரை மணி நேரம் தமிமுன் அன்சாரியிடம் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசியதுடன் அவரை வாசல் வரைச் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல் தளர்ச்சி காரணமாக பெரும்பாலும் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என அவரது மகன் துரை வைகோ மூலம் தமிமுன் அன்சாரி முயற்சித்துள்ளார். இதையடுத்து தாம் வெளியூரில் உள்ள நிலையிலும் இன்று காலை சென்னை அண்ணா நகர் இல்லத்துக்கு சென்று தனது தந்தையை தமிமுன் அன்சாரி சந்தித்து பேச ஏற்பாடு செய்திருக்கிறார் துரை வைகோ.

அரசியல் பேசவில்லை
இதையடுத்து வைகோவை சந்தித்த தமிமுன் அன்சாரி அவருக்கு மைக்கேல் H.ஹார்ட் எழுதிய 100 என்ற நூலை வழங்கினார். இந்த நூலை வாங்கிவுடன் பக்கம் பக்கமாக புரட்டிப் பார்த்து அதிலுள்ள வரிகளை மோலோட்டமாக வாசித்து அற்புதமான புத்தகம் என பாராட்டினார் வைகோ. முடிந்தவரை அரசியல் பேசுவதை தவிர்த்த வைகோவிடம், அவருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்காத வகையில் கடந்த காலத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டது, மது ஒழிப்பு போராட்டத்தை இணைந்து முன்னெடுத்தது என பழைய நினைவலைகளை மட்டும் பகிர்ந்திருக்கிறார் தமிமுன் அன்சாரி.

பழைய நினைவுகள்
இதனால் பழைய நினைவலைகளில் மூழ்கிய வைகோ, தமிமுன் அன்சாரியை தேநீர் சாப்பிடச் சொன்னதுடன் அவர் அங்கிருந்து புறப்பட்ட போது வாசல் வரை சென்று வழியனுப்பியும் வைத்திருக்கிறார். முன்னதாக மறைந்த மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகார் மறைவுக்கு தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்த போது, 2 முறை ஸ்டெண்ட் பொருத்திக் கொள்ளுமாறு நான் கூறியும் புகாரி அதை கேட்கவில்லை என கண் கலங்கியிருக்கிறார்.

கேசுவலாக வைகோ
என் பேச்சைக் கேட்டு ஸ்டெண்ட் பொருத்தியிருந்தால் முராது புகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்காது என வருந்திய வைகோவுக்கு தமிமுன் அன்சாரி ஆறுதல் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பு நடைபெற்ற போது வைகோ மிகவும் கேசுவலாக லுங்கியில் இருந்தபோதும் புகைப்படம் எடுத்துக்கொள்ள இசைவு தெரிவித்ததுடன் மிகவும் குரல் உடைந்து பேசியிருக்கிறார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications