ஒரே நாளில்.. ஒரே வீட்டில்.. ஒரே நேரத்தில்.. "அண்ணனின்" செம மாஸ் என்ட்ரி.. திக்குமுக்காடிய திமுக..!

முக அழகிரி கோபாலபுரத்திற்கு வருகை தந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதோ அதோ என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று முக அழகிரியும், முக ஸ்டாலினும் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தனர்.
ஸ்டாலின் பதவியேற்புக்கு முன்பேயே, முக அழகிரி பாசத்துடன் தம்பிக்கு வாழ்த்து என்று சொல்லி இருந்தார்.. இதையடுத்து, பதவியேற்றதும், மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி வாய்மொழி உத்தரவினை முக ஸ்டாலின் பிறப்பித்ததாகவும் சொல்லப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரைக்கு ஸ்டாலின் சென்றிருந்தபோது, எப்படியும் அழகிரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

அழகிரி

அழகிரி

ஸ்டாலின் வீடு தேடி வந்து பார்க்கட்டும் என்று அழகிரி நினைத்துவிட்டாராம்.. அண்ணனே வந்து தம்மை நேரில் வந்து சந்தித்து பேசட்டும் என்று ஸ்டாலின் நினைத்து விட்டாராம்.. இப்படிப்பட்ட சூழலில், ஜுன் 3-ம்தேதி, அதாவது இன்றைய தினம் கருணாநிதி பிறந்த நாள் அன்று இருவரும் எப்படியும் சந்தித்து விடுவார்கள், அன்றைய தினம் குடும்பத்தினருடன் இணைந்து கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்றும் அதற்கு பிறகு அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி ஏதாவது தரப்படும் என்றும் தகவல்கள் பரபரத்து வந்தன.

அழைப்பு

அழைப்பு

அந்த தகவல்தான் தற்போது கூடி வந்துள்ளது.. ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கே அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், தொற்று உக்கிரத்தில் பரவி வருவதால், சென்னைக்கு வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.. ஆனால், எதிர்பார்த்தபடியே இன்றைய தினம் சென்னைக்கு வந்துவிட்டார் அழகிரி..

அஞ்சலி

அஞ்சலி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில், மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம், அண்ணா அறிவாலயம் ஆகிய பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.. பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... அப்போதுதான் அழகிரி என்ட்ரி ஆனார்..

திமுக

திமுக

ஸ்டாலினை தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அழகிரியும் அங்கு வந்து சேர்ந்ததால், அங்கிருந்தோருக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது.. பின்பு அழகிரியும் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... இதையெல்லாம் பார்த்த திமுகவினரோ, விரைவில் திமுகவுக்கும் அழகிரி ரீ - என்ட்ரி தருவார் என்கிறார்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+