தமிழ்நாடு கடற்கரையில் கடலோர காற்றாலைகள்! பிரதமர் மோடியிடம் நச்சுன்னு கோரிக்கை வைத்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் கடலோர காற்றாலைகள் அமைக்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நச்சுன்னு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த இது தொடர்பான கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு;

தமிழ்நாடு கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான காற்றாலை மின்திட்டங்கள் அமைப்பதற்கான வளங்கள் உள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வறிக்கையில் அதிகப்பட்சமாக 31 ஜிகாவாட் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் வினாடிக்கு 9 மீட்டர் முதல் 12 மீட்டர் வரையிலான அதிகப்பட்ச காற்றின் வேகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வதிகப்படியான காற்றின் வேகம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இவ்வாறு கடலோரக்காற்றாலைகள் மூலம்கிடைக்கப் பெறும் அதிகப்படியான மின்சாரத்தினால் அனல்மின்நிலையம் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை குறைப்பதற்கு வழிவகை செய்வதுடன் காற்று மாசினை பெருமளவு குறைத்திட வழிவகை செய்யும்.
தமிழ்நாடு மீனவர்களையும் கடலோர காற்றாலை மின் திட்டங்கள் அமைக்க ஒருங்கிணைத்து அவர்களைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பங்கேற்க செய்வதில் தமிழ்நாடு மாநிலத்தின் மிகப்பெரியபங்களிப்பு உள்ளது.

மத்திய மின்துறை அமைச்சகம் தனது 27.05.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கப்படும் மின்சாரத்தினை, மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொந்தமாநிலத்திற்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவழி வகைசெய்கிறது.
எனவே அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ளநெய்வேலி அனல்மின்நிலைய விரிவாக்க திட்டம்I&II, புதுநெய்வேலி அனல்மின் திட்டம், மெட்ராஸ் அணுமின் நிலையம், கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய திட்டங்களில் 50 விழுக்காடுஅளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவழிமுறையினை கையாண்டு காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மொத்த மின்சாரத்தில் 50 விழுக்காட்டினை அதன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.
மேலும் கடலோர காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரத்தினை பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (PGCIL) மின்கட்டமைப்பின் வழியே வழங்காமல், மாநிலத்தின்மின் தொடரமைப்பு (STU) கட்டமைப்பின் வழியே வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications