''நல்லுள்ளங்கள் நன்கொடை.. ஒவ்வொருவரது பங்களிப்பும் பேரிடரை வெல்ல துணையாகட்டும்''.. ஸ்டாலின் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பலர் நன்கொடை அளித்து வருவதாகவும், நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

MK Stalin has said the contribution of each and every one of us should help in overcoming this corona disaster

கொரோனா பணிகளை மேற்கொள்ள தாராளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கவர்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியும், தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைவோம் வா எனப் பல நல்லுள்ளங்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 கோடியை இன்று வழங்கினார்.நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+