ஆன்லைன் வகுப்புகளில் முறையற்று நடந்தால் போக்ஸோ சட்டம் பாயும்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்தனர்.

ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்களை காண்பிப்பதும், ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவதும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிர்ச்சி புகார்களை அடுக்கினார்கள். இதனை தொடர்ந்து காம கொடூர ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர் ராஜகோபாலனிடம் புழல் போலீசார் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட்ட வேண்டும். இந்த பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.
இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளி கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குனர், கணினி குற்ற தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
இந்த குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும், இணையவழி நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கும். இணைய வழி வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைன் உருவாக்கப்படும்.
இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்பு காவல் பிரிவில் காவல்கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications