ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடு.. விசாரிக்க குழு! அதிரடியாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மழைநீர் வடிகால்கள் சேதப்படுத்தப்பட்டதால் தான் தியாகராய நகரில் அதிகமாக நீர் தேங்கியது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2 வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் கேள்வி பதில் நேரம், ஆன்லைன் சூதாட்டம் குறித்த அரசின் நடவடிக்கை, வேதா இல்லம், அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் தொடர்பான காரசார விவாதங்கள் நடைபெற்றன.
முன்னதாக மழை நீர் தேங்குவதற்கு அரசு முறையாக மழைநீர் வடிகாலை தூர்வாறாததே காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு,உண்மையிலேயே அதிமுக அந்த இடங்களை தூர்வாரியிருந்தால் தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது. பருவமழைக்கு 3 மாதம் காலத்திற்கு முன்பே பணிகள் ஆரம்பித்து செயல்படுத்தியதால் தான், சென்னை ஓரளவு தப்பித்துள்ளது என்று கூறினார்.

விரிவாக விசாரிக்க குழு அமைப்பு
அவற்றை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாகவும் முதல்வர் பேசினார். "ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னையில் தியாகராய நகரில் மழைநீர் அதிகம் தேங்கியது. இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மழைநீர் வடிகால்கள் சேதப்படுத்தப்பட்டதால் தான் தியாகராய நகரில் அதிகமாக நீர் தேங்கியது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தி. நகரில் வெள்ளம்
அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. தொடர் மழைகளால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பலநாட்களாக வடியாத வெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமானோர் வெள்ளநீரிலும் இருளிலும் தத்தளித்தனர்.

நிதி என்னவானது?
இந்த மழை வெள்ளத்திற்கு அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுதான் காரணம் என்று அப்போது ஆய்வு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை என்று கூறிய ஸ்டாலின், இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்றும் வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள்
டிசம்பர் மாதத்திலும் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பேசிய மு.க. ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்கப்படாத சூழலால் தியாகராய நகரில் மழைநீர் தேங்கியதாக குறிப்பிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும் என கூறினார். இந்த நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications