தம்பி பதவியேற்பு விழாவில் அண்ணன் மு.க.அழகிரி ஆப்சென்ட்.. அவருக்கு பதிலாக பங்கேற்றது யார் தெரியுமா?
திமுகவின் தீவிர விசுவாசியாக, கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்ற பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை: மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மு.க. அழகிரி பங்கேற்கவில்லை. ஆனால் அவரது மகன் துரை தயாநிதி பங்கேற்றுள்ளார்.
எத்தனை ஆண்டு கால தவம், எத்தனை ஆண்டுகால காத்திருப்பு ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இதனை தொடந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

துரை தயாநிதி பங்கேற்பு
ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடந்து வருகின்றனர். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் அண்ணனான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி விழாவில் பங்கேற்றுள்ளார்.

ஊர் அறிந்த விஷயம்
மு.க.அழகிரி விழாவில் பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக தனது மகனை அனுப்பி வைத்துள்ளார் அழகிரி. மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் தேர்தலுக்கு முன் நடந்த பிரச்சினைகள் உயர் அறிந்த விஷயம். கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி தேர்தல் பணியாற்றவில்லை.

வாழ்த்து கூறினார்
மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் அடிக்கடி எதிர் கருதத்துகளை வெளிப்படுத்தினார் மு.க.அழகிரி. இந்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் அழகிரி. ''முதல்வாராக பொறுப்பேற்கும் எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவரது தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என நம்புகிறேன்'' என்று மு.க.அழகிரி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி விழாவில் பங்கேற்றுள்ளார். மு.க.அழகிரி விரைவில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்கள் கூறுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications