மு.க.ஸ்டாலின் விடுத்த திடீர் அழைப்பு... சட்டசபைக்குச் செல்லும் ரஜினிகாந்த்!
சென்னை: சட்டப்பேரவையில் நடைபெறும் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கருணாநிதி மீது தாம் வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவுக்கு தலைமையேற்க உள்ளதால், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் மாலை 4 மணி வரை மட்டுமே அரங்கத்திற்குள் வர அனுமதியளிக்கப்படவுள்ளது.

நூற்றாண்டு விழா
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார். 1977-ம் ஆண்டுக்கு பிறகு குடியரசுத் தலைவர் ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்க வருவது இப்போது தான்.

அழைப்பிதழ்
இதனிடையே இந்த விழாவுக்கான அழைப்பிதழ்கள் நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள், என பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. முக்கியமான நபர்களுக்கு சட்டபேரவை தலைவர் அப்பாவு இல்லையென்றால் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரே நேரடியாக சென்று கருணாநிதி படத்திறப்பு மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா அழைப்பிதழை கொடுத்துவிட்டு முதல்வர் சொன்னதையும் தெரிவித்துவிட்டு வந்தனர்.

ஸ்டாலின் அழைப்பு
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு சென்றிருக்கிறது. இதையடுத்து ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை ரஜினிகாந்த் சட்டமன்றத்திற்கு செல்வார் என்ற தகவல் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் இப்போது முதலே கோட்டையை சுற்றி குவிந்து வருகின்றனர்.

கோவையில் கமல்
இதனிடையே கமல்ஹாசனுக்கும் அழைப்பு சென்றிருக்கும் என்றும் ஆனால் அவர் சென்னையில் இருந்தால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியது வரும் என்பதால் நேற்றே கோவைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த 10 நிமிடம் மட்டுமே உரையாற்ற உள்ளார்.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"விஜய்யை பார்த்து தொடங்கிய இயக்கமா? ரஜினிக்கு பொறாமையா?" ஓபனாக பேசிய லதா ரஜினிகாந்த் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications