மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?
சென்னை: வளைகுடா போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்.
மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாது, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தொடர் மோதல் போக்கு
மத்திய அரசுடன், தமிழ்நாடு அரசுக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீடு, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கான நிதி, பேரிடர் நிதியில் பாரபட்சம், மாநில அதிகாரங்களில் தலையீடு, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நெருக்கடி, நிதி பகிர்வில் ஏற்றத்தாழ்வு என முரண்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழக அரசு vs மத்திய அரசு
இது தவிர, ஆளுநர் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தி திணிப்பும் தமிழ்நாடு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. ரயில் நிலையங்களில் வேண்டும் என்றே இந்தி மொழிக்கு முன்னுரிமை கொடுத்தது எல்லாம், தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கை அதிகரித்திருக்கிறது.
காரணம் இதுதான்
இந்த காரணங்களே, பிரதமர் மோடி தலைமையிலான மீட்டிங்கை புறக்கணிக்க போதுமானவை. ஆனால், தற்போது தேர்தல் தொடங்கியிருக்கிறது. எனவே நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. இந்த காலத்தில், முதலமைச்சர் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது. பிரதமர் தலைமையிலான மீட்டிங் என்பது, பெட்ரோல், டீசல், எல்பிஜி விற்பனையை நெறிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
5 மாநிலங்களிலும் இதுதான் நிலைமை
எனவே இதில் பங்கேற்பதன் மூலம் முதலமைச்சர் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆகவே தலைமை செயலாளர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தலைமை செயலாளர்கள்தான் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications