தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் - புதிய தலைமுறை சர்வே
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு 28.33% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் புதிய தலைமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சிக்கு வர உள்ளார்கள் என்பது குறித்து கருத்துகணிப்புகளை நடத்தியிருந்தது. அந்த கணிப்புகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வெளியிட்டு வருகிறது,

திமுக ஆட்சி
புதிய தலைமுறை கேட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்றான உங்கள் தொகுதியில் பலமுனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 38.51% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு
இதேபோல் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முதல்வராக வர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 28.33% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

மக்கள் நீதி மய்யம் தலைவர்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வர 6.45% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்

நாம் தமிழர் கட்சி
தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாம் என 4.93% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது. சீமான் இரண்டாவது முறையாக தனித்து சட்டசபை தேர்லை களம் காண்கிறார்.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications