"மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது.." சாடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்
சென்னை: மத்திய அரசின் 202-23 பட்ஜெட்டை பலரும் சாடி வரும் நிலையில், இதனை மக்கள் நீதி மய்ய தலைவர் கமலும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் 2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டை போலவே முற்றிலும் காகிதமில்லாத பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு பட்ஜெட் உரை வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. பொதுவாக பட்ஜெட் நாளன்று பங்குச்சந்தைகளும் பெரியளவில் ஏற்றம் அல்லது இறக்கத்தைச் சந்திக்கும். ஆனால், இந்த ஆண்டு பங்குச் சந்தை பெரியளவு தாக்கம் இல்லாமல் இருந்தது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டிற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக மாதச் சம்பளம் பெறும் மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை எனப் பலரும் சாடி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட்டை சாடி வருகின்றனர். மோடி அரசு தாக்கல் செய்தது எதுவும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட் எனக் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கூட விமர்சித்துள்ளார். பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான அம்சங்கள் எதுவும் இல்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சாடியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என்று சாடியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications