புண்படுத்தீட்டீங்க..இப்படி போனா நல்லதுக்கில்லை! கோதாவில் இறங்கிய மநீம கமல்ஹாசன்! ஆளுநருக்கு அட்டாக்!
சென்னை : அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வருகை தந்த ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்துக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார்.

சட்டசபை கூட்டம்
எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் தமிழ்நாடு குறித்த பேச்சுக்கு சட்டசபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் எழுந்ததோடு ஆளுநரின் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில் ஆளுநரின் பேச்சுக்கு இடையே அரசு அளித்திருந்த சில வார்த்தைகளை அவர் தவிர்த்து விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் உரை
மேலும் ஆளுநர் தனது போக்குக்கு உரையை வாசித்ததும் கடும் கண்டனங்களை பெற்றது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட சபையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் இருக்கும்போதே முதல்வர் பேசியது அவை நாகரிகத்தை மீறியது என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன்
இந்நிலையில் அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு.

மாநில அரசு
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் (ஆளுநரால் ஒப்புதலளிக்கப்பட்ட உரையும் கூட) பல பகுதிகளை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது ஏற்கத்தக்கதல்ல. அதுமட்டுமின்றி, அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் இல்லாத சில புதிய விஷயங்களை, சொந்தமாக சேர்த்துப் பேசியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் முறையாக முடிவடைந்து, தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே சட்டப்பேரவையில் இருந்தும் வெளியேறியுள்ளார் ஆளுநர்.

அவமதிக்கும் செயல்
சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசிவரும் பல கருத்துகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளன.

ஆளுநரை மாற்ற வேண்டும்
அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை, மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளார். இதுபோன்று மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம்" என கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications