"ஓவர்.. ஓவர்".. பாஜகவில் "அவர்" சொன்ன அதே வார்த்தை.. திமுகவை சீண்டும் கமல்.. இதுதான் காரணமா?
வெள்ளை அறிக்கை குறித்து கமல்ஹாசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது... இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இந்த முறை பட்ஜெட் திமுகவுக்கு மிக முக்கியமான பட்ஜெட் ஆகும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் பட்ஜெட் ஆகும்.. வரும் 13-ம் தேதி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது... இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்...
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் நேற்றைய தினம் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்... அதில், மிக முக்கிய அம்சமாக பிடிஆர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

கடன்
"தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி.. கடந்த 10 வருஷங்களில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிந்துள்ளது.. ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருக்கிறது.. ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது என்பன போன்ற பல விஷயங்களை லிஸ்ட் போட்டு தெரிவித்திருந்தார்.

விளக்கம்
அதுமட்டுமல்லாமல், அதிமுக அரசின் தவறான நிதி மேலாண்மையால்தான் இப்படியெல்லாம் சரிவு ஏற்பட்டது என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கும் மேலாக இதுகுறித்து விளக்கம் தந்திருந்தார்.. இந்த வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர்..

கூட்டணி
ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.. அதிமுக கூட்டணி தரப்பிலோ, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை திசை திருப்பவே பொய்யான தகவல்களை திமுக வெளியிட்டுள்ளது என்கிறார்கள்.. திமுக கூட்டணி தரப்பிலோ, இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

வெள்ளை அறிக்கை
இந்நிலையில், வெள்ளை அறிக்கையை, மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

திமுக
கமலின் இந்த ட்வீட் 2 வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. சுரண்டல் தளர்வின்றி நடைபெறும் என்று வெளிப்படையாகவே சுட்டிக் காட்டி உள்ளார்.. இன்றைய தினம் அதிமுகவின் மிக முக்கிய தூணான எஸ்பி வேலுமணி தரப்பிடம் ரெயிடு நடந்துவரும் நிலையில், திமுகவை குறி வைத்து கமல் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.. சோஷியல் மீடியா முழுவதும், திமுகவின் இன்றைய தின அதிரடியை பலரும் பாராட்டி வரும் நிலையில், கமல் மட்டும் ஏன் இப்படி சொல்கிறார்? என்ற எதிர் கேள்வியும் எழுகிறது.

ட்வீட்
அதேபோல, கமல் சொன்ன அதே வார்த்தையைதான் எச்.ராஜாவும் காலையில் சொல்லி இருந்தார்.. வெள்ளை அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.. பாஜகவின் எச்.ராஜா கேட்ட கேள்வியையே கமலும் கேட்டுள்ளது சில சந்தேகங்களையும் எழுப்புகிறது..

எச்.ராஜா
கமல் ஏன் எச்,ராஜாவை போல அதே வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்? ஒருவேளை பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கிறாரா? அல்லது யதேச்சையாக நடந்த ஒரு விஷயமா? என்று தெரியவில்லை.. அதேசமயம், கடந்த அதிமுக ஆட்சியில் கமல் பெரும்பாலான ஊழல் குற்றச்சாட்டுகளை அதிமுக மீதுதான் வைத்திருந்தார்.. பிரச்சாரங்களின்போதுகூட, திமுக பற்றி வாயே திறக்கவில்லை.. திமுகவை எந்த குறையும் சொல்லவில்லை.. குறிப்பாக ஊழல் என்ற வார்த்தையுடன் திமுகவை ஒப்பிட்டும் பேசவில்லை..

விமர்சனம்
முழுக்க முழுக்க அதிமுக பாஜகவையே சாடியிருந்தார்.. அப்படி இருக்கும்போது, நேற்றைய தினம் வெள்ளை அறிக்கையில் அதிமுக மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், அதை திமுக பக்கமே திருப்பி விட்டு விமர்சித்துள்ளதற்கான காரணம் விளங்கவில்லை.. திமுகவை கமல் திடீரென சீண்ட காரணம் என்ன? கோவையில் ஓட்டுக்களை பிரித்ததாலா? அல்லது கோவை மகேந்திரனை தட்டி தூக்கியதாலா? என்றும் புரியவில்லை.. ஆனால், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில், கமலின் இந்த திடீர் மாறுபாடு, தமிழக அரசியல் கட்சிகளிடம் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகின்றன.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications