Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்பி ஆயிட்டாரு கமல்..எம்டி ஆயிருச்சே கட்சி! திமுகவோடு கரைந்த மய்யம்? குமுறும் உறவுகளும், உயிர்களும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்வேன் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமலஹாசன். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு திமுக தயவால் தற்போது எம்பியும் ஆகிவிட்டார். இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்தவர்களை கமல் கண்டு கொள்ளவில்லை எனவும், திமுகவோடு அவர் ஐக்கியமாகிவிட்ட நிலையில், மாவட்ட அளவிலான அரசியலில் தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லை என புலம்புகின்றனர் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும்..

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக பயணித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் கால் பதித்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டது. நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை கொண்டவர் ஆண்டவர் என அழைக்கப்படும் கமல்.

5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர். அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும், திரையுலகில் அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த அவருக்கு வெற்றி தேவை என்ற சூழலில் விக்ரம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

Kamal Haasan MNM dmk

அதற்கு பிறகாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கமலை, தக் லைஃப் என அடுத்தடுத்து படங்கள் கமலை அதலபாதாளத்தில் தள்ளியது. ஆனாலும் அரசியலில் அவரது பயணம் தற்போது தான் மேலே சென்று கொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமலஹாசனை கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார். இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை.

அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ், இந்தியன் - 2 உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார். இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமலஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்தனர். இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த கமல், சுமார் 10 தொகுகளில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸின் ராகுல் காந்தி உடனான நெருக்கம் காரணமாகவே அவர் திமுக கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்டது. அதற்கு பரிசாக அவர் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கமல் எம்பி ஆகிவிட்ட நிலையில், கட்சியை அவர் கண்டு கொள்ளவில்லை என்பது நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக சில மாதங்களுக்கு முன் கமலஹாசன் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதற்கு பிறகாக சினிமா துறை சார்ந்து மட்டுமே நடிகர் கமலஹாசன் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதிகபட்சம் மக்கள் பிரச்சினை, அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு ட்விட்டரில் மட்டுமே பதிவு போட்டு வருகிறார். ஏற்கனவே கமல் கட்சி ஆரம்பித்தபோது முக்கிய முகங்களாக இருந்த பொன்ராஜ், குமரவேல், மவுரியா, சந்தோஷ் பாபு, மகேந்திரன், பத்மப்பிரியா, புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகி வேறு வேறு கட்சிகளில் பயணித்து வருகின்றனர்.

இதில், பத்மபிரியா, மகேந்திரன் கமலின் செயல்பாடுகள் பிடிக்காமல் திமுகவில் இணைந்த நிலையில், திமுக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார் கமல். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்தவர்களை கமல் கண்டு கொள்ளவில்லை எனவும், திமுகவோடு அவர் ஐக்கியமாகிவிட்ட நிலையில், மாவட்ட அளவிலான அரசியலில் தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லை என புலம்புகின்றனர் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும்..

இது தொடர்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த மநீம நிர்வாகிகளிடம் பேசியபோது தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்."கமல் கட்சி ஆரம்பித்தபோது படித்தவர், பண்பட்ட அரசியல்வாதி என்ற முறையில் அவர் பின்னால் வந்தோம். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி உரிமையாளர்கள் என பலரும் அவர் பின்னர் திரண்டோம். அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் சொந்த செலவில் தான் போட்டியிட்டோம். கட்சியில் இருந்து ஒரு ரூபாய் கூட தரவில்லை. கமல் பிரச்சாரம் வருவது தொடங்கி, ஒவ்வொரு முறையும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் தான் செலவு செய்தோம்.

ஆனால் தற்போது கமல் கிட்டத்தட்ட திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். சென்னையை பொருத்தவரை அவர் உடன் இருப்பவர்கள் பெரும்பாலும் திரை பிரபலங்கள் தான். அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் சென்னையைத் தாண்டி அரசியல் செய்ய முடியவில்லை. எந்த பிரச்சனையிலும் குரல் கொடுக்க முடியவில்லை. மாவட்ட செயலாளர் யார் என்று இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் திமுகவையும் அதிமுகவையும் பகைத்துக் கொண்டோம்.

திமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளை ஆர்ப்பாட்டம் போராட்டத்திற்கு அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் அழைக்கிறார்கள். ஆனால் எங்களை கண்டு கொள்வதில்லை. ஏன் மதிப்பதே இல்லை. இப்படி கமலுக்காக அரசியலுக்கு வந்த நிலையில் அவர் செட்டில் ஆகிவிட்டார்" ஆனால் செட்டில் ஆகி இருந்த நாங்கள் பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்" என குமுறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+