அய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி - பிறந்த நாளுக்கு கமல்ஹாசனின் கவிதை
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் அழிக்கவே முடியாத பெருங்கவிஞன் கவியரசர் கண்ணதாசன். மனிதர்களின் பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு படிநிலையையும் தமது பாடல்வரிகளால் கல்வெட்டுகளாக செதுக்கி வைத்துவிட்டு காலமாகிவிட்டார் கண்ணதாசன்.
தாய், தந்தை, தாய் மாமன், மனைவி என அத்தனை உறவுகளின் ஆழத்தையும் நெஞ்சில் தைக்கும் அளவுக்கு வைர வரிகளால் பாடிவிட்டு பறந்து போய்விட்டார் அந்த பெருங்கவிஞன். கவியரசர் இன்று நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது பாடல்கள் நம்மில் ஒலிக்காத நேரம் ஏதும் இல்லை.

இந்த மகத்தான கவிஞனின் 94-வது பிறந்த நாள் இன்று. நான் நிரந்தரமானவன் என பாடிச் சென்ற அந்த பைந்தமிழ் கவியரசருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வழங்யிருக்கும் பிறந்த நாள் கவிதை :
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.

நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.
என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு திரு @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் கவிதை! pic.twitter.com/LVeLUbMGKb
— Raaj Kamal (@RKFI) June 24, 2020
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications