ஸ்ரீபிரியா அருகில் சென்ற குடிகாரர்.. அதற்கு பிறகு நடந்ததுதான் மேட்டரே.. அரண்டு போன மயிலாப்பூர்..!

ஸ்ரீபிரியா அருகில் சென்ற குடிகாரர்.. அதற்கு பிறகு நடந்ததுதான் மேட்டரே.. அரண்டு போன மயிலாப்பூர்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீரென தன் அருகில் வந்து நின்ற குடிகார நபரை கண்டதுமே நடிகை ஸ்ரீபிரியா அதிர்ந்து போய்விட்டார்.. அதற்கு பிறகு அந்த குடிகாரர் செய்த காரியத்தை கண்டு மயிலாப்பூர் தொகுதியே மிரண்டு போனது.

Recommended Video

    சென்னை: ஸ்ரீப்ரியா மேடம் காசு கொடுங்க... வாழ்வே மாயம் கமல் ரசிகன் அலப்பறை!

    இந்த முறை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை ஸ்ரீபிரியா களம் இறங்கி உள்ளார்.. மயிலாப்பூரில்தான் கமல் போட்டியிடக்கூடும் என்ற வலுவான அனுமானங்களை உடைத்தெறிந்துவிட்டு, ஸ்ரீபிரியா அங்கு போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவேன் என்று சொல்லி வாக்கு சேகரித்தும் வருகிறார். அப்படித்தான் நேற்றும் ஸ்ரீபிரியா பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. இவரது வருகைக்காக பேண்டு வாத்திய இசையும் அங்கு ஏற்பாடாகி இருந்தது..

     பிரச்சாரம்

    பிரச்சாரம்

    அந்த மியூசிக் போட்டதுமே ஒருவர் எகிறி எகிறி டான்ஸ் ஆடே ஆரம்பித்துவிட்டார்.. அவர் ஒரு நோயாளி போலும்.. மூக்கு முட்ட குடித்திருந்தார்.. 2 கைகளிலும் பேண்டேஜ் போட்டிருந்தார்.. அப்போதுதான் சிகிச்சை முடிந்து வந்திருப்பார் போலும்.. மியூசிக் கேட்டதும் திடீரென குதூகலத்தில் டான்ஸ் ஆடியதை, அந்த தொகுதி மக்கள் வியந்து பார்த்தனர்.

     செலவுக்கு காசு

    செலவுக்கு காசு

    அந்த நேரத்தில்தான் ஸ்ரீபிரியா அங்கு வந்தார்.. அவரை பார்த்ததும் அந்த குடிகாரர் மேலும் குஷியாகி விட்டார்.. ஸ்ரீபிரியா அருகில் சென்றார்.. தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டார்.. இதை ஸ்ரீபிரியா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. சுற்றிலும் பொதுமக்களும் இதை கவனித்து கொண்டுதானிருந்தனர்.. உடனே ஸ்ரீபிரியா, பணம் எல்லாம் கிடையாது என்றார்..

     குடிகாரர்

    குடிகாரர்

    ஆனாலும் அந்த குடிகாரர், பணம் வேண்டும் என்று கேட்டு தன் கையை நீட்டி கொண்டே இருந்தார்.. அந்த இடத்தையும் விட்டு செல்ல மறுத்துவிட்டாடர்.. பொறுத்து பொறுத்து பார்தத ஸ்ரீபிரியா, உடனே உஷாரானார்ர்.. அந்த தொண்டரை அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தார்.. இதன்பிறகு போலீசார் அந்த நபர் யார் என்ன என்று விசாரித்தனர்.

    விசாரணை

    விசாரணை

    அவர் ஒரு தீவிரமான கமல் ரசிகராம்.. பெயர் பாண்டியராஜ்.. சிவகங்கையை சேர்ந்தவர்.. இவர் ஒரு தீவிர இருதய நோயாளி ஆவார்.. சென்னை ஜிஎச்-சில் சிகிச்சையில் இருந்திருக்கிறார்.. ஆனால், அங்கே சொல்லாமல் கொள்ளாமல் தப்பி வந்துவிட்டார்.. சொந்த ஊருக்கு போகலாம் என்று சென்று கொண்டிருந்தபோதுதான், போகிற வழியில் ஸ்ரீபிரியாவை பார்த்ததும் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டார் போலும்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+