Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக மோடி, அமித்ஷா மதிக்கவில்லை.. ரவீந்திரன் துரைசாமி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மதிக்கவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறினார்.

அண்ணாமலையை காமராஜர் மாதிரி ஒரு வலிமையான தலைவராக வளர்க்க டெல்லி தலைமை நினைக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமியோ தன்னை ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டு அண்ணாமலையிடம் பேச மாட்டோம்.. மேலிடத்தில் தான் பேசுவோம் என்று அண்ணாமலைக்கு எதிராக வதந்திகளை பரப்புனாங்க என்று ரவீந்திரன் துரைசாமி கூறினார்,

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது நெறியாளர் கௌதமன் பேசுகையில், அமித்ஷா சென்னை வந்து சென்றது அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Modi and Amit Shah did not respect Edappadi Palaniswami as a great leader: Raveendran duraisamy

அண்ணாமலையை மிகவும் புகழ்ந்து அமித்ஷா பேசினார். என்னுடைய தம்பி அண்ணாமலை, கிராமம் வரைக்கும் கட்சியை கொண்டு போய் சேர்த்திருக்குறாரு.. கட்சி வளர்ந்திருக்கு என்று சொன்னார். அண்ணாமலை தற்போது பேசி வருவது குறித்து நீங்கள் (ரவீந்திரன்) பேசும் போது, டெல்லி உத்தரவு இல்லாமல் இப்படி அண்ணாமலை பேசமாட்டாரு என்றே கூறினீர்கள்.. அமித்ஷாவின் ஆசீர்வாதத்தில் தான் அண்ணாமலை இவ்வளவு நாளாக இதை செய்து கொண்டிருந்தாரா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ரவீந்திரன் துரைசாமி, "நிச்சயமாக .. அண்ணாமலை ஐபிஎஸ் முடித்தவர்.. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். அவர் மோடி, அமித்ஷாவின் எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் தான் செயல்பாடுகிறார் என்பது கணிப்பாக உள்ளது. அதனால் தான் அமித்ஷாவின் கருத்தை அண்ணாமலை கூறுகிறார் என்று நான் சொன்னேன். காமராஜர், மூப்பனார் பெயரை பயன்படுத்தி அண்ணாமலையை அமித்ஷா புகழ்கிறார் என்றால், இவர் எங்க ஆளு, இவரை வைத்து நாங்கள் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க போகிறோம் என்பது தான்.

2004ல் தென் சென்னை தொகுதியில் இல கணேசனுக்கு சீட் கொடுக்கவிடாமல் ஜெயலலிதா செய்தார். அன்றைக்கு புதுக்கோட்டையில் திருநாவுக்கரசுக்கு சீட் தரவிடவில்லை. அந்த அளவிற்கு பாஜக மீது ஜெயலலிதா ஆளுமை செலுத்தினார். எடப்பாடி ஓபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையில் 2019ல் 39க்கு 38 தொகுதியில் பிளாப் ஆன சூழ்நிலையில், பன்னீரும் இப்போது கூட இல்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை இப்போது ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டு, அண்ணாமலையிடம் நாங்கள் பேசமாட்டோம், மேலிடத்தில் தான் நாங்கள் பேசுவோம் என்று கூறியதுடன், திட்டமிட்டு அண்ணாமலைக்கு எதிராக வதந்திகளை பரப்பினாங்க.. அண்ணாமலையை நீக்க போறாங்க என்று கட்டுக்கதையை பரப்புனாங்க.. எந்த வகையிலுமே நடைமுறைக்கு பொருந்தாத விஷயத்தை அதிமுக தரப்பில் பரப்பிக்கொண்டு இருந்தாங்க.. ஆனால் அமித்ஷாவோ அண்ணாமலையை புகழ்ந்து வலுவான தலைவர், முக்கியமான தலைவர் என்பதை நேற்று முன்தினம் தனது பேச்சின் மூலம் உறுதி செய்திருக்கிறார் என்று ரவீந்திரன் கூறினார்.

மேலும் 2019ம்ஆண்டு தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதத்தை விவரித்த ரவீந்திரன், ஜெயலலிதாவிடம் இருந்து 44 சதவீதம் வாக்கில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 17 சதவீதமும் , நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம், அமமுக ஆகியவற்றுக்கு சேர்த்து 13 சதவீதம் வாக்கு சதவீதம் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். 15 சதவீதம் வாக்குகள் பிரதமர் மோடி மற்றும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வந்ததாக கூறினார். இரட்டை தலைமையாக இருந்த போது தான் இந்த வாக்கு சதவீதமும் கிடைத்தது, ஒற்றை தலைமையாக இருந்தால் இதுவும் கிடைக்காது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்காளர்களை ஓட்டாக மாற்றும் திறன் போதிய அளவு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மதிக்கவில்லை என்றும் கூறினார். முழு வீடியோவை பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+