Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிஞ்சா அரசியல்வாதி விஜயை சீண்டுங்கள்.. விஜய்க்கு ஆதரவாக மொத்தமாக களமிறங்கிய.. காங்கிரஸ் படை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக மொத்தமாக காங்கிரஸ் தலைகள் களமிறங்கி போஸ்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தொடங்கி க்ரிஷ் ஜோடங்கர் வரை விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார்.

பிரதமர் மோடி அழுத்தம் தருகிறார், அதனால் ஜனநாயகனுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள். அதன் அடிப்படையில் பிரதமர் மோடி இந்த படத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார் ,முடிந்தால் அரசியல்வாதி விஜயை எதிர்த்து நில்லுங்கள். உங்கள் நெஞ்சுரத்தை காட்டுங்கள்.. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் தவறான பயன்பாடு குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞரின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Vijay tvk jananayagan

பிரதமர் மோடி அழுத்தம்

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் மீது நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நியாயமற்றது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

மோடி ஜி, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56-அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று நடிகர் விஜயை எதிர்க்காதீர்கள். என்று தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக இருக்கும் க்ரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.

க்ரிஷ் ஜோடங்கர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லெப்ட் ஹேண்ட் போல செயல்பட கூடியவர். அதேபோல் ஜனநாயகன் ரிலீஸில் தமிழ் மக்களை பாஜக அவமதிக்கிறது என்று பிரவீன் சக்ரவர்த்தியும் விமர்சனம் செய்துள்ளார். இவர் ராகுல் காந்திக்கு ரைட் ஹேண்ட் போல செயல்படக்கூடியவர்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

முன்னதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்துள்ள போஸ்டில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்

ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.

அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.

ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர்.இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், என்று செய்துள்ளார். முன்னதாக மாணிக்கம் தாகூரும் விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+