சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 உட்பிரிவுகள் இணைக்கப்பட்டு தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவர்- பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

சென்னை: தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் என்று சென்னையில் பிரதமர் மோடி பேசினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை.. சென்னையில் பிரதமர் மோடி இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை.. சென்னையில் பிரதமர் மோடி

சென்னை அறிவுமிக்க நகரம்

சென்னை அறிவுமிக்க நகரம்

சென்னையில் இன்று பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியதாவது:- சென்னை வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை மாநகரம் அறிவு, ஆற்றல் நிரம்பிய நகரமாகும்.சென்னை அறிவு மற்றும் படைப்பு திறன் உரியது. இனிய வரவேற்பு அழுத்த தமிழக மக்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி

கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி

இந்த திட்டங்கள் புதுமை., உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடையாளங்கள். இவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால் நாம் கல்லணை கால்வாயை புதுப்பித்து அடிக்கல் நாட்டி இருக்கிறோம். கல்லணை கால்வாயை சீரமைக்கும் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. இதனால் தஞசாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்பெறும் நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை ஆகும்.

நீரை பராமரிக்க வேண்டும்

நீரை பராமரிக்க வேண்டும்

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும். நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்திலும் குறித்த நேரத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 119 கி.மீ. மெட்ரோ ரெயில் பணிக்காக 63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசல் குறையும். வண்ணாரப்பேட்டை- விம்கோ சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூரிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பு என்பது சுயசார்பு பாரதம் இலக்குக்கு ஊக்கம் தரும்.

அர்ஜூன் டாங்கி என்ற வீரன்

அர்ஜூன் டாங்கி என்ற வீரன்

2 பாதுகாப்பு துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.அர்ஜூன் டாங்கியில் பயன்படுத்தும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது. நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும்.பாதுகாப்பு துறையில் தற்சார்பை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

கடலோர பகுதிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்

கடலோர பகுதிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்

2 லட்சம் சதுர அடியில் சென்னை டிஸ்கவரி வளாகம் அமைக்கப்படுகிறது. இந்த டிஸ்கவரி வளாகம் கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும். சீர்திருத்தங்களில் அரசு உறுதியாக உள்ளது என்பதை பட்ஜெட்டில் காட்டி உள்ளோம். இந்திய கடலோர பகுதிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது. கருணை, விடா முயற்சியின் சின்னம்தான் இந்திய மீனவர்கள்.

தமிழகத்தில் கடல்பாசி பூங்கா

தமிழகத்தில் கடல்பாசி பூங்கா

மீன்பிடி தொழிலுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. கடல்பாசி வளர்ப்பு தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பன்னோக்கு கடல்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும். சென்னை உட்பட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். சமூகம், பொது உள்கட்டமைப்புகள் அதிவிரைவாக மேம்படுத்தப்படுகின்றன. கிராமங்கள் அனைத்துக்கும் மின்வசதிக்காக புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சுகாதார கட்டமைப்பு கொண்டது இந்தியா. நமது சுகாதார கட்டமைப்பினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். கொரோனாவுக்கு எதிரான உலகின் போரை இந்தியா வலிமையாக்கி வருகிறது. இந்திய தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவி வருகிறது.

தேவேந்திரகுல வேளாளருக்கு மகிழ்ச்சியான செய்தி

தேவேந்திரகுல வேளாளருக்கு மகிழ்ச்சியான செய்தி

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன். தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் என அரசியல் சாசன திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவேந்திர குலவேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு கொடுத்து வருகிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் கண்ணியத்தை கா லனிய அரசு பறித்தது.

நாகரிகம் சார்ந்தது

நாகரிகம் சார்ந்தது

2015-ல் டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் சந்திப்பு நடத்தினேன். அப்போது தேவேந்திர என்பதும் நரேந்திர என்கிற என் பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் அல்ல- நீதியானது. தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.

English summary
In Chennai, Prime Minister Modi said that the Central Government has approved the name change of Devendra Kula Vellalar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X