Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக போட்ட பலே ப்ளான்.. திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி! பரபரப்பாகும் மதுரை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பாஜகவின் கவனம் தமிழகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது. மார்ச் ஒன்றாம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசனம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்பு படையினரும், மதுரை போலீசாரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்

கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த திருப்பரங்குன்றம் மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட அனுமதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு மலை கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

Narendra Modi Tirupparankundram Tamil Nadu Assembly Election 2026

திருப்பரங்குன்றம் அரசியல்

இந்த மனு மீதான விசாரணையின் போது மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. அதற்கு சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மூலம் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்துள்ளதாகவும், இதனால் கோவில் நகரங்களில் கவனம் செலுத்த பாஜக முடிவு எடுத்துள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணி

ஏற்கனவே காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை எடப்பாடியிடம் பாஜக கேட்ட நிலையில் தற்போது மீண்டும் அது தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019 முதல் அதிமுக-பாஜக கூட்டணி அடிக்கடி உடைந்து, மீண்டும் சேர்ந்து இயங்கி வரும் நிலையில், புதியதாக கூட்டணியை உறுதி செய்ய முயற்சிகள் தீவிரமாகியது. மக்களவை தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பின்னர், வாக்குச்சதவீதம் அடிப்படையில் இணைந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும் என பாஜக கருதியது.

2026 சட்டமன்ற தேர்தல்

இதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு கூட்டணியை உறுதி செய்ததாகத் தகவல்கள் வந்தன. அத்துடன் பாஜக 50க்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கோரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதமே 'ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி' என்ற கோரிக்கையும் பாஜக வைத்திருந்தது. குறிப்பாக கோவை, கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகளில் கூடுதல் சீட்டுகள் வேண்டும் எனவும் கேட்டதாக தகவல் வெளியானது.

மோடி தமிழ்நாடு பயணம்

தற்போதைய சூழலில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தமிழகம் வந்து சென்ற நிலையில் அடுத்தடுத்து அவர் பயணத் திட்டங்கள் தமிழகத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி

இந்த நிலையில் வருகிற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெறும் என்.டி.ஏ. கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை வரும் அவர் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அடுத்த நாள் சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் அவர் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கே இருக்கிறார். அதற்கு முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சுவாமி தரிசனம்

இதை அடுத்து மத்திய பாதுகாப்பு படையுடன் இணைந்து மதுரை போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். கோவில் வாசல் முதல் கருவறை வரை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ள நிலையில் மகா மண்டப படிக்கட்டு வழியாக பிரதமர் கருவறை அருகே சென்று சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் போராட்டத்தால் தேசிய அளவில் திருப்பரங்குன்றம் விவகாரம் பேசப்பட்ட நிலையில், தற்போது பிரதமர் மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்ய இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+