கணவனுக்கு தெரியாமல்.. ஒளிச்சி வைச்ச ரூபாய் நோட்டுகள்.. பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பாவம்யா இவங்க - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவனுக்கு தெரியாமல் வீடு முழுவதும் ஒளித்து வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது. வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த இந்த பணத்தில் செல்லாததால் அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து பெண் ஒருவர் கண்கலங்கிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

திருமணமான பெண்கள் தங்களின் கணவர்களுக்கு தெரியாமல் வீட்டில் பணத்தை சேமித்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதன்பிறகு வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளவும், குழந்தைகள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுக்கவும் அதனை பயன்படுத்துகிறார்கள்.

money-after-9-years-a-woman-discovers-money-which-was-hides-from-husband-and-forgots-herself-now-cr

குறிப்பாக நம் அம்மாக்கள் கூட சமையலறையில் உள்ள கடுகு டப்பாவில் அப்பாவிற்கு தெரியாமல் நாணயம், ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்து சேமித்து வைத்திருப்பதை பார்த்திருக்கலாம். ஒவ்வொரு விஷயத்திற்கும் கணவனிடம் காசு கேட்க வேண்டாம் என்பதற்காகவே இதனை பெண்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வீட்டில் ஆங்காங்கே ரூ.500 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்ததும், தற்போது வீட்டை சுத்தம் செய்தபோது 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணம் கிடைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் அழுது கொண்டிருக்கிறார்.

அவர் முன்பு பழைய 500, ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் கிடக்கின்றன. இந்த நோட்டுகளை பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாததாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது சில 500 ரூபாய் நோட்டுகளும், ஒரு 1000 ரூபாய் நோட்டும் உள்ளது.

அதனை சுட்டிக்காட்டி அவரது மகள், தனது தாயை கிண்டல் செய்கிறார். தனது தந்தைக்கு தெரியாமல் தாய் சேமித்த பழைய ரூபாய் நோட்டுகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் என் அம்மா கவலையடைந்துள்ளார் என்று அந்த மகள் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

இதனை பார்க்கும் பலரும் இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் 50 சதவீத பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சி செய்து பாருங்கள் என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, பெண்கள் கில்லாடிகள்.. கணவருக்கு தெரியாமல் பணம் சேமிப்பதில் அவர்களை விட புத்திசாலிகள் இருக்க முடியாது என்று கூறி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+