Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! வீர் மகான் இந்த விஷயத்தில் ”வீக்”கா? மார்பில் கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : wwe எனப்படும் வேர்ல்டு வ்ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட்டில் கலக்கி வரும் இந்திய வீரரான வீர் மகான் குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அன்னையர் தினமான இன்று அவர் குறித்து மேலும் பல சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..

டபுள்யு.டபுள்யு.இ என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர். 7 அடி உயரம் ஸ்டைலான நடை மிரட்டலான அறிமுகத்தோடு வரும் அவருக்கு ஏழு உயிர்டா என சொல்லாத 90'ஸ் கிட்ஸே இருக்க முடியாது.

அண்டர் டேக்கருக்கு அடுத்து தி ராக் எனப்படும் டுவைன் ஜான்சன், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், ரோமன் ரென்ய்ண்ட்ஸ், ரே மிய்ஸ்ட்ரீயோ என பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நீளும் அளவுக்கு இந்த பட்டியல் நீளும்.

WWE வீரர்கள்

WWE வீரர்கள்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களே டபிள்யூ டபிள்யூ இ-ல் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல் இந்தியர் என்றால் இந்த கிரேட் காளி. சுமார் எட்டு அடி உயரத்துடன் ஒரே அடியில் ஏழு உயிர் கொண்ட அண்டர்டேக்கரை அடித்து வீழ்த்தும் பலம் கொண்ட அவரை இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பஞ்சாபி பாடலுடன் என்ட்ரி கொடுத்து எதிராளிகளை ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டு என மிரட்டியவர். அதற்கு அடுத்ததாக ஜிந்தர் மஹால் என்ற பெயருடன் மற்றொரு இந்திய வீரர் களமிறங்கினார். பஞ்சாபிகளுக்கு உரிய தலைப்பாகையுடன் சில போட்டிகளில் கெத்துக் காட்டிய அவர் அதன் பிறகு சில நாட்களில் காணாமல் போனார்.

ரிங்கு சிங் என்ற வீர் மகான்

ரிங்கு சிங் என்ற வீர் மகான்

அவரைத் தொடர்ந்து, இந்த போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் மற்றொரு இந்திய வீரர் வீர் மகான். உத்தர பிரதேச மாநிலத்தில் லாரி ஓட்டுநரின் 9 குழந்தைகளில் ஒருவரான வீர் மகானின் இயற்பெயர் ரிங்கு சிங். பள்ளி நாட்களில் ஈட்டி எறிதலில் பங்கேற்று, தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு போட்டிகளில் வென்ற பதக்கங்கள் ஏராளம். ஈட்டி எறியும் அனுபவத்தோடு, 2008ல் தி மில்லியன் டாலர் ஆர்ம் என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரிங்கு சிங்.

பேஸ்பால் வீரர்

பேஸ்பால் வீரர்

பேஸ்பால் விளையாடும் திறமையான வீரர்களின் கண்டறிவதற்காக நடத்தப்பட்டது அந்த நிகழ்ச்சி. அப்போது பேஸ்பால் விளையாடிய அனுபவமே இல்லை அவருக்கு இருந்தாலும் ஈட்டி எறிதலில் இருந்த அனுபவத்தோடு, அதிவேகத்தில் பேஸ்பால் வீசி முதலிடம் பிடித்தார் ரிங்கு சிங். இதன்பிறகு பேஸ்பால் மீதான ஆர்வம் அதிகரிக்க, அமெரிக்காவுக்கு பறந்தார் அவர் பீட்டர்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற அமெரிக்க பேஸ்பால் அணியில் முதல் இந்திய வீரராக இணைந்து கொண்டார் ரிங்கு சிங்.

கலக்கும் வீர் மகான்

கலக்கும் வீர் மகான்

2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை பேஸ்பாலிலும் பல பதக்கங்களை வென்ற ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானதே Million Dollar Arm திரைப்படம். அதன்பிறகு அவர் கவனம் செலுத்தியது வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் எனப்படும் WWE... 2018ல் WWE உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ரிங்கு சிங், இந்திய வீரர் சௌரவ் குஜ்ஜருடன் இணைந்து செயல்பட்ட அணி, தி இண்டஸ் ஷேர். WWE NXT போட்டிகளில் பங்கேற்று 12 முறை வெற்றிபெற்ற ரிங்கு சிங், WWE ராவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்டு 2021. நீண்ட தலைமுடி, கருமையான கண்கள், நெற்றியில் பட்டையோடு களமிறங்கிய ரிங்கு சிங்கின் தற்போதைய பெயர் வீர் மகான்.

அம்மா பாசம்

அம்மா பாசம்


ஆவேசமாக களமிறங்கும் வீர் மகானின் மார்பில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது அம்மா என்ற வார்த்தை. பங்கேற்ற முதல் போட்டியிலே பறந்து பறந்து தாக்கும் ரே மிஸ்டீரியோவை பந்தாடி, வியப்படைய வைத்தார் வீர் மகான். இப்போது அவர் சவால் விடுத்திருப்பது பிராக் லசனனுக்கும், ரோமன் ரெய்ன்க்கும். இது இன்றைய wwe ரசிகர்களின் பேசுபொருளாக மாறி, டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் இந்த வீர் மகான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+