Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் தேமுதிக + ஓபிஎஸ் + டிடிவி தினகரன்? 234 தொகுதிகளில் யாருக்கு எத்தனை சீட்? லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி அமைகிறது. இந்த நிலையில் அதிமுக 160 இடங்களில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamil nadu assembly election 2026 dmk admk 2026

மீதமுள்ள 74 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கூட்டணியில் பிரதான கட்சியான பாஜகவுக்கு 23 இடங்களும் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு 23 இடங்களும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இவர்களுக்கு 46 இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்துத் தரப்படும் என சொல்லப்படுகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது. மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் அங்கம் வகிக்கும் பாஜக மூத்த தலைவர்கள், விஜய் என்டிஏ கூட்டணிக்கு வரவேண்டும் என வெளிப்படையாக கேட்டனர். விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடனே கூட்டணி என்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தவெக கூறிவிட்டதால் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

அது போல் விஜயகாந்த் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றிருந்த பாஜக மூத்த தலைவர்கள் தேமுதிக, என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேமுதிக வரும் 9ஆம் தேதி தேமுதிக மாநாட்டில் வைத்து யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கும் என சொல்லியிருக்கிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்த போது மாநிலங்களவை சீட் கொடுப்பதாக அதிமுக வாக்குறுதி அளித்துவிட்டு கொடுக்கவில்லை என்ற கோபம் பிரேமலதாவிடம் இருக்கிறது.

கோஷ்டி பூசல்

அது போல் பாமகவில் தற்போது அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என இரண்டாக பிரிந்துள்ளது. இதில் அன்புமணி பாமக, பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என தெரிகிறது. ராமதாஸ் பாமக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணி

அது போல் டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம் யாருடன் கூட்டணிக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் நிச்சயம் அதிமுக- பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் இருவரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டார்கள்.

தேமுதிக, அமமுக, ஓபிஎஸ்

எனவே தேமுதிக, ராமதாஸ் பாமக, அமமுக, ஓபிஎஸ்ஸின் அதொஉமீக உள்ளிட்டவைகளை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க திமுக முயற்சித்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை திமுக நடத்தி வருகிறதாம்.

பாமக ராமதாஸ்

ராமதாஸ் பாமகவுக்கு 7 இடங்களும் தேமுதிகவுக்கு 8 இடங்களும் வழங்க திமுக முடிவு செய்துள்ளதாம். தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு சேர்த்து 8 தொகுதிகளை ஒதுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விசிக ஆட்சேபம்

ஒரு வேளை விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் சீட் கேட்டால் அவர்களுக்கு அவ்வாறு ஒதுக்க தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றிரண்டை குறைத்துக் கொள்ளவும் திமுக முடிவு செய்துள்ளதாம்.

லிஸ்ட் இதோ

திமுக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பார்க்கலாம்.

திமுக- 170

காங்கிரஸ் - 20

விசிக- 8

மார்க்சிஸ்ட்- 3

கம்யூனிஸ்ட்- 3

மதிமுக- 2

மனிதநேய மக்கள் கட்சி- 2

இந்திய முஸ்லீம் லீக் - 2

கருணாஸ் கட்சி- 1

பாமக ராமதாஸ்- 7

தேமுதிக- 8

ஓபிஎஸ் + டிடிவி- 8

அண்மையில் சேலத்தில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட செயல் தைவர் தலைவர் ஸ்ரீகாந்திமதி, வரும் தேர்தலில் 25 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் செல்லும். ஆட்சியில் பங்கு பெறுவோம் என தெரிவித்திருந்தார். ஆனால் இவர் சொல்வது போல் யாருமே பிரிந்து கிடக்கும் பாமகவுக்கு 25 தொகுதிகளை கொடுக்க மாட்டார்கள். எனவே ஒற்றை இலக்கத்தில்தான் சீட் கிடைக்கும். அது போல் ஆட்சியில் பங்கு என்பதை அதிமுகவும் திமுகவும் எப்போதும் ஊக்குவிக்காது. எனவே தொண்டர்களை உற்சாகப்படுத்த காந்திமதி அவ்வாறு பேசியிருக்கலாம். ஆனால் உண்மை நிலை இதுதான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+