Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணினு மரியாதை இல்லை.. அண்ணன்னு பயமுமில்லை.. உடல்நலம் குன்றிய கணவரிடம் கதறிய மத்திய பிரதேசம் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுவதுமே பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. பாலியல் வன்கொடுமைகளும் பெருகி வருகின்றன.. இதனால் குடும்ப வன்முறைகளும் அதிகமாகி வருகின்றன.. அந்தவகையில், மத்திய பிரதேசத்தில் தற்போது நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்பட்டு, மொத்த மாநில மக்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. இது தொடர்பான விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை தேடும் பணியும் நடக்கிறது... என்ன நடந்தது மத்திய பிரதேச மாநிலத்தில்?

மத்திய பிரதேசம் மாநிலம் தப்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது),.. இவருக்கு 25 வயதாகிறது.. கடந்த 2023ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் தீபிகாவுக்கு திருமணம் நடந்தது.. மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை துவக்கிய இந்த தம்பதிக்கு இப்போது 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

Crime Madhya Pradesh Wife

தீபிகாவின் கணவர்

இந்நிலையில், தீபிகாவின் கணவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.. இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் உடல் சீராகவில்லை. பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் பலனில்லை.. இதனால் அவரால் வேலைக்கும் செல்ல முடியாததால், வீட்டிலேயே முடங்கும் சூழலுக்கு ஆளானார்.

இதனிடையே தீபிகா, திடீரென போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

வெளியூருக்கு சென்ற கணவர்

அதாவது, தீபிகாவின் கணவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதுமே, குவாலியர் நகரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள ரத்லம் மாவட்டத்தின் ஜாவ்ரா பகுதியில் உள்ள உசைன் தெக்ரி ஷெரீப்புக்கு செல்லும்படியும், அங்கு சென்ற பலருக்கும் உடல் தேறியிருப்பதாகவும் கணவரிடம் சிலர் சொன்னார்களாம்.

இதனால், கணவரும், தீபிகாவை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றிருக்கிறார்.. வீட்டில் தனியாக இருந்த தீபிகாவை, கணவரின் 2 சகோதரர்களும் நோட்டமிட்டுள்ளனர்.. இதில், 2வது சகோதரர் தீபிகாவின் அறைக்குள் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. அவர் வெளியே சென்றதும், கணவரின் மூத்த சகோதரர் உள்ளே புகுந்து தீபிகாவை பலாத்காரம் செய்துள்ளார்.

ஏர் கூலர் ரூமில் நுழைந்த சகோதரர்கள்

வீட்டில் அனலடித்ததால், ஏர் கூலரை அறையின் கதவு பகுதியில் தீபிகா வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.. இதன்காரணமாக கதவையும் பூட்டாமல் இருந்திருக்கிறார்.. இதைதான் கணவரின் 2 சகோதரர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக தெரிகிறது. இவர்கள் 2 பேரும் பலாத்காரம் செய்ய முற்பட்டபோது, தீபிகா கடுமையாக அவர்களை எதிர்த்துள்ளார்..

ஆனால், பக்கத்தில் படுத்திருந்த 10 மாத பெண் குழந்தையை கொலை செய்து விடுவோம் என்று இருவருமே மிரட்டினார்களாம்.

அதுமட்டுமல்ல, இப்படி உறவு வைத்துக் கொண்டால், உன் கணவரின் உடல்நிலை குணமாகிவிடும், தங்களுக்கு எதிர்ப்பு சொன்னாலோ, அல்லது இதை பற்றி வெளியில் சொன்னாலோ, எல்லாமே தவறாக போய் ஆபத்தில் முடிந்துவிடும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

கண்ணீர் வடித்த தீபிகா

இப்படியே பலமுறை மிரட்டி, தீபிகாவை இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. பிறகு 1 மாதம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார் தீபிகாவின் கணவர்.. அவரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி தீபிகா அழுதுள்ளார்..

ஆனால் தீபிகாவின் பேச்சை அவரது கணவர் நம்ப மறுத்துள்ளார்.. தன்னுடைய தம்பிகள் மீது பொய்யான குற்றச்சாட்டை வேண்டுமென்றே சொல்வதாக கூறுகிறாராம்.. எனினும், இந்த சம்பவத்தினால் தீபிகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பூர்வீக வீட்டை விட்டு வெளியேறி, அதே ஏரியாவில் மார்க்கெட் பகுதியில் தம்பதி இருவரும் குடியேறினார்கள்.


போலீசுக்கு போன மனைவி

ஆனால், அப்போதும் விடாமல், கணவர் வீட்டில் இல்லாதபோது, அவரது சகோதரர் தீபிகாவை பலாத்காரம் செய்துள்ளார்... கணவரிடம் பலமுறை இதை பற்றி சொல்லி மனம் நொந்துபோன தீபிகா, தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார்.

கணவர் பலமுறை அழைத்தபோதும், அவருடன் செல்ல மறுத்துள்ளார்.. எதற்காக கணவர் அழைத்தும் செல்ல மறுக்கிறாய்? என்று பெற்றோர் கேட்டபோதுதான், நடந்த விஷயங்களை சொல்லி அழுதுள்ளார் தீபிகா. இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.. ஆனால், கணவரின் வீட்டார் ஒருத்தருமே இதில் பங்கேற்கவில்லை..

இதனால் மேலும் விரக்திக்கு ஆளான தீபிகா, தன்னுடைய பெற்றோருடன் சென்று குவாலியர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில்தான், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் கணவரின் இரு தம்பிகளும் தலைமறைவாகிவிட்டனர்.. எனவே, அவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+