சென்னையில் மீண்டும் மூழ்கிய முடிச்சூர்.. வாடிய வரதராஜபுரம்.. அப்ப எல்லாமே வேஸ்ட்டா.. இதான் இப்ப தேவை
சென்னை: மழைவெள்ளம் வந்தாலே, சென்னையின் புறநகர் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.. அதிலும் முடிச்சூர் பகுதி வெள்ளநீரில் மூழ்கியே விடுகிறதே... ஏன்?
உலுக்கி சென்ற புயல் பாதிப்பிலிருந்து சென்னை இன்னும் முழுமையாக மீளவில்லை.. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது.. இதுபோலவே, கடந்த 2015 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்திலும் புறநகர் பகுதிகளில் வெகுவாக பாதித்தன.

மழை வெள்ளம்: அந்த வருடம் வட கிழக்கு பருவ மழையில் வழக்கத்துக்கு மாறாக 104% அதிக மழை பதிவாகியிருந்தது.. வழக்கமாக, சராசரியாக 789 மி.மீ மழை தான் பதிவாகும்.. ஆனால், 2015 ஆண்டு 1608.6 மி.மீ மழை பதிவாகியிருந்ததால்தான், சென்னை மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
திடீரென செம்பரம்பாக்கம் ஏரியில் பல்லாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தாம்பரம் முடிச்சூர் பகுதியும் பலமாக பாதித்தது. காரணம், அடையாறு ஆற்றிலேயே இந்த பகுதிகள் உள்ளன.. அதனால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, இந்த பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து தனி தீவாகவே மாறிவிட்டன..
முடிச்சூர்: குறிப்பாக, முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து மண்ணிவாக்கம் செல்லும் சாலை மற்றும் மணிமங்கலம் செல்லும் சாலைமுழுவதும் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கு பிறகு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.. ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.. வெள்ளம் நீர் ஊருக்குள் வர காரணமான இடங்கள் என்னென்ன என்பதை கண்டறிந்து அந்த இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டன.
மேலும், முடிச்சூர் வரதராஜபுரம் தாம்பரம் போன்ற பகுதிகளில் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கரைகள் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டன. அடையாறு ஆறு தூய்மைப்படுத்தப்பட்டது..
வெள்ளநீர்: முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் வருடந்தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சிஎம்டிஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்தனர்.. மேலும், அந்த பகுதி தண்ணீர், அடையாறு ஆற்றில் சென்று விழும்வகையிலும் வழிவகை செய்தார்கள்.
ஆனால், இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் எல்லாமே இப்போது வீணாகிவிட்டது.. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள், இப்போது மறுபடியும் வெள்ளநீரில் மூழ்கி மிதக்கின்றன.. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சொல்லும்போது, சரியான திட்டமிடாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
நிரந்தர தீர்வு: இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், அடையாறு ஆற்றை இன்னும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை, கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விடவேண்டும். இதனால், மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கப்பட்டுவிடும்..
அதேபோல, முடிச்சூர் லட்சுமி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் கட்டன் கால்வாய் அமைத்து அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும். இவைகளை செய்தால் மட்டுமே, அடுத்து வரும் மழைவெள்ள பாதிப்பிலிருந்து முடிச்சூர், வரதராஜபுரம் தப்பிக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications