Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபத்வா போட்டது பாஜக கைக் கூலி..இஸ்லாமியர்களுக்கு பிடித்த தலைவர் விஜய் தான்! ஒரே போடாக போட்ட முஸ்தபா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம்' என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி தெரிவித்திருப்பது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் என கூறும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் பாஜகவின் கை பாவையாக, கைக்கூலியாக செயல்படுகிறது எனவும், இஸ்லாமிய மக்களுக்கு பிடித்த தலைவர் விஜய் என கூறியிருக்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமலான் நோன்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார். அதில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத ஒழுக்கம் இல்லாதவர்கள் மதச் சடங்குகளை பின்பற்றாத நபர்கள் கலந்து கொண்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் சகாபுதீன் ராஸ்வி பரேல்வி.

vijay tvk Muslim League

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர்," குடிகாரர்கள் சூதாட்டக்காரர்களை விஜய் இப்தார் விருந்துக்கு அழைத்திருக்கிறார். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய் செயல்பாடுகள் இருக்கிறது. அவரது பின்னணி இஸ்லாத்திற்கு எதிரானது. விஜய் நடித்த பல திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதம் மற்றும் வன்முறையுடன் தொடர்புபடுத்தி காட்டி இருக்கிறார். இப்படியான படங்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது தவறான படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செய்துவிட்டு விஜய் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்த முயல்கிறார்" எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை இஸ்லாமியர்கள் அனைவரும் நேசிக்கிறார்கள் என கூறியிருக்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா. இது தொடர்பாக பேசிய அவர்," விஜய் நடத்திய இஃப்தார் விருந்தில் அனைவரையும் சமமாக ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் செய்வது போல தரையில் அமர்ந்து நோன்பு துறந்தார். இந்த செயலை அனைவரும் வரவேற்கிறார்கள். தற்போது விஜய் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் என கூறும் கில இந்திய முஸ்லிம் ஜமாத் பாஜகவின் கை பாவையாக, கைக்கூலியாக செயல்படுகிறது.

பாஜகவின் கிளை அமைப்புகளில் ஒன்று தான் அகில இந்திய முஸ்லிம் ஜமாத். அகண்ட பாரதம் வேண்டுமென குரல் கொடுத்தவர் தான் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி. வக்பு வாரிய சட்டம் மூலம் இஸ்லாமியர்களின் சொத்தை பாஜக அபகரிக்கிறது என இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கட்சிகளும் இஸ்லாமியர்களும் கொந்தளித்து வரும் நிலையில் அந்த சட்டத்தை ஆதரித்தவர் சகாபுதீன் ராஸ்வி.

ரமலான் மாதத்தில் கிரிக்கெட் கிரவுண்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சாமி தண்ணி குடித்தார் என சர்ச்சையை கிளப்பியவர் தான் இவர். தொடர்ச்சியாக இஸ்லாமியர்களை இழிவு படுத்த வேண்டும் என்பதுதான் இவரது திட்டம். இதற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத இவர் தற்போது குரல் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பிடித்தவர் விஜய்" எனக் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+