முஸ்தபா பாய் என்றாலே நல்ல பெயர்.. அதுவும் திமுகவை.. விஜய் அட்டென்ஷனுக்காக இப்படியா: கோட்டீஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முஸ்தபா பேரவையில் பேசும்போது, 1999-ல் இஸ்லாமிய மக்கள் அடைந்த பாதிப்புகளைக் கூறி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். இருப்பினும், "திமுகவினர் எங்களை 5 முறை முஸ்லீம் தீவிரவாதிகள்" என்று பேசுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக முஸ்தபா மீண்டும் ஆவேசமாக கூறியிருந்தார். முஸ்தபாவின் இந்த பேச்சு மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோட்டீஸ்வரன், "சட்டமன்றத்தில் இப்படியொரு குற்றச்சாட்டை திராவிட கட்சிகளான திமுகவும் சரி, அதிமுகவும் சரி ஒரு நாளும் செய்தது கிடையாது, செய்யப்போவதும கிடையாது..

Mustafa Bhai

முஸ்தபா இப்படி பேசலாமா

இதற்கு காரணம், அறிஞர் அண்ணாதான் 2 கட்சிகளுக்கும் ஃபவுண்டேஷன்.. "எம்மதமும் சம்மதம்", "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்ற பாதையில்தான் கருணாநிதியும், எம்ஜிஆரும், அவர்களுக்கு பின் வந்தவர்களும் பயணித்து வந்துள்ளனர்.. இஸ்லாமியர்கள் என்பவர்கள், நம் குடும்பத்தில இருந்து பிரிந்து சென்றவர்கள், நமக்கு சொந்தம்..

ஆனால், தமிழ் சமுதாயம் என்று பார்க்கும்போது அது ஒரே குடும்பம்.. மார்க்கம் வேறு மாதிரி இருக்கலாமே தவிர தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் இதுவரை கிடையாது, இனிமேலும் வரப்போவதில்லை. இதனால் தேவையில்லாத தர்மசங்கடத்தை ஜேசிடி பிரபாகருக்கு தவெக உறுப்பினர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்..

இத்தனைக்கும் முஸ்தபா டிடிவி தினகரனுடன் பயணித்தவர், பல தலைவர்களுடன் பயணித்தவர். முஸ்தபா பாய் என்றாலே எழும்பூர் சட்டமன்றத்தில் நல்ல பெயர்.. முக்கியமாக, முஸ்தபா கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், மணல்குவாரி, ஒயின்ஷாப் வசூல் போன்ற கேடுகெட்ட அரசியலை செய்யாத நல்ல மனிதர்.. ஆனால், இன்றைக்கு அவர் அவையில நடந்தது கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத ஒரு பேச்சு, கண்ணியம் இல்லாத பேச்சு..

அமைச்சர் ராஜ்மோகன்

காயிதே மில்லத் வழியில நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு இப்படியா பேசுவது? திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இஸ்லாமியர்களை அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளது. அப்படித்தான் அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன், ரஹீம், ஆவடி நாசர், மஸ்தான், எம்எம் அப்துல்லா, தமீமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ் இவர்கள் எல்லாம் சமுதாயத்தில் தலைவர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று வரையிலும் நல்லா இருந்தார் அமைச்சர் ராஜ்மோகன்.. "அடிக்க பாய்கிறார்கள் பாருங்க பேரவை தலைவரே" என்கிறார்.. யார் இவரை அடிக்க பாய்ந்தது?

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், அன்றைய சபாநாயகர் தனபால் மேஜைக்கு முன்னாடி டான்ஸ் எல்லாம் ஆடினார்கள்.. மேஜை எல்லாம் தூக்கி தூக்கி போட்டாங்க. குத்தாட்டம்கூட போட்டாங்க. அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, கண்ணியமாக, ஒரு கட்சியின் அரசியல் ஆளுமையாக நடந்து கொண்டார். ஆனல் இந்த பக்குவம் தவெகவிடம் இல்லை.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்

"இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொல்றது யாரோட பாஷை? யாரோட மொழி?.. புரிதல் இல்லாமல் முஸ்தபா போன்றவர்கள் தமிழ்நாட்டில் இல்லாத ஒரு பிரச்சனையை அரசியல் தாயத்துக்காக பேசுவது தவறு.. மதம் என்பது அமைதியையும் நிம்மதியையும் போதிப்பதாக இருக்க, இதுபோன்ற மதவாத அரசியலை சட்டமன்றத்தில் முன்னெடுப்பது அதன் சீரியஸ்னஸ் தெரியாமல் செய்கிறார்கள்..

யார் பயங்கரமாக கத்தி பேசுகிறார்களோ, யார் பாட்டு பாடுகிறார்களோ,அவர்களை விஜய் திரும்பி பார்ப்பார் என்று நம்பிக்கொண்டு உறுப்பினர்கள் பேரவையில் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மின்சார பிரச்சனை குறித்து விவாதம் வைத்தால், நிர்மல் குமாரை, நாக் அவுட்தான் செய்துவிட்டு போய் கொண்டேயிருப்பார் செந்திர்ல பாலாஜி.. எதிர்கொள்ள தெம்பு திராணி இல்லை.. செந்தில் பாலாஜி பேசிவிட கூடாது என்பதற்காகத்தான், டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து புகாரை கிளப்புகிறார்கள். குதிரை பேரம் பற்றி எடப்பாடி பேசுகிறார் என்றதுமே, மைக்கை நிறுத்தி விட்டார்கள்.. ஏன் இப்படி தவெக உறுப்பினர்கள் செய்ய வேண்டும்?

இஸ்லாமிய தீவிரவாதி

இஸ்லாமிய தீவிரவாதி என்று ஒருத்தர் பேசுறார், அவர் என்ன நோக்கத்திற்காக அப்படி பேசினார்? இந்த வார்த்தையே தவறு.. இந்திய இறையாண்மைக்கு எதிரான வார்த்தை.. தமிழ்நாட்டில் மதம் என்றே நோயே கிடையாது.. இல்லாத விஷயத்தை அவையில் ஏன் பேசுகிறார் முஸ்தபா..

இதே முஸ்தபா, பீஸ்ட் பட ரிலீஸின்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகபோராட்டம் நடத்தினார். இப்போது தவெக எம்எல்ஏ ஆனதும் நிலைப்பாடு மாறியிருக்கிறார்.. அத்தனையும் விஜய்யின் கடைக்கண் பட வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறார்.

தனி மனித தாக்குதல், ஆபாசமான வார்த்தை பிரயோகம்

குடிநீர் பிரச்சனை, மின் கட்டண உயர்வு, விவசாயிகள் பிரச்சனை, எண்ணூர் துறைமுகத்தில் மீன்கள் இறந்துபோனது மற்றும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் போன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை.. தேவையில்லாததை பேசி நீண்ட நேரம் சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உறுப்பினர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள்.. விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பஞ்ச் டயலாக்குகளையும், சண்டைகளையும் கையிலெடுக்கிறார்கள் உறுப்பினர்கள்.

நாளுக்கு நாள் சட்டமன்ற விவாதங்களின் தரம் குறைந்து, தனி மனித தாக்குதல்களாகவும் ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்களாகவும் மாறுகிறது.. பரந்தூர் விமான நிலையம் போன்ற விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+