திமுக பாஜக கூட்டணியை 'முதல்வர் ஸ்டாலின் காக்கி பேண்ட்' மூலம் கண்டுபிடித்த நாம் தமிழர் சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துவிட்டது என்பதை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காக்கி கலர் பேண்ட் அணிந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே வெளிப்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜகவுடன் எந்த உறவும் வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்தியது. தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

naam tamilar seeman

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்படவில்லை; மத்தியில் ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர்களை அழைத்து விழா நடத்தியது ஏன்? என அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், ராஜ்நாத் சிங் அவர்களை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வோடு நாம் உறவு வைத்துக் கொண்டிருக்கிறோம், உறவு வைக்கப்போகிறோம் என்று ஒரு செய்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது ஊடகத்திற்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும், ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் திமுக-வைதான், வாழ்த்தினாலும் திமுக-வைதான். நாங்கள் எல்லாம் ரகசிய உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமே இல்லை. அம்மையார் இந்திராகாந்தி அவர்களே சொன்னார்கள், கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும், திமுக-வை பொறுத்தவரைக்கும் எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லியிருக்கிறார் என கூறியிருந்தார். ஆனாலும் அண்ணா திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் , திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துவிட்டதாக கூறி வருகின்றன.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று பார்த்தீங்களா? முதல்வர் ஸ்டாலின் பேண்ட்தான் போடுகிறார்.. எதுக்கு காக்கி பேண்ட் போடனும்? நீங்க திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவிட ஆட்சியாளர்கள், பெரியாரின் வழிதோன்றல்கள் என்கிறீர்களே ஏன் காக்கி பேண்ட் போடனும்? என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+