விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேனா? பெரிய நகைச்சுவை: சீமான் திட்டவட்ட மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி ஆகிய 2 பெண்களால் நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் 13 ஆண்டுகளாக இந்த பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். பெண் வன்கொடுமை பேசும்போது, ஆண் வன் கொடுமையும் பேசனும் அல்லவா? நான், என் குடும்பம் சார்ந்த உறவுகள், என்னை சார்ந்த லட்சக்கணக்கான உறவுகள், உலகம் முழுவதும் இருக்கும் என் உறவுகள் என எங்களைப்படுத்திய வன்கொடுமையை? யார் யாரை சொல்வது என இருக்கிறது இல்லையா?

Naam Tamilar Chief Seeman denies Actress Vijayalakshmis Seven Abortions claim

விஜயலட்சுமியிடம் விசாரணை, ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து போகிறார்கள், மருத்துவ பரிசோதனை என பாட்ஷா பட பில்டப்பை விட ஓவராக இருக்கிறது. 2 பெண்கள் சேர்ந்து ஒருத்தனை வன்கொடுமை செய்வதை விட வேறு வன்கொடுமை இந்த சமூகத்தில் இருக்கிறதா? கோடி மக்களால் நேசிக்கப்படுகிற ஒரு மகனை நிறுத்தி வாய்க்கு வந்ததை எல்லாம் குற்றச்சாட்டு என சொல்ல, அதை ஊடகங்களும் போட ரசிப்பதை என்னவென்று சொல்வது? இந்த சமூகம் முன்பு நான் அவமானப்படுவது, அசிங்கப்படுவதை ரசிப்பது வன்கொடுமை இல்லையா?

என் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்கனும். 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பதெல்லாம் என்ன நகைச்சுவை? நான் திருட்டுத்தனமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரு ரசீது கொடுத்திருப்பாங்கதானே? அது எங்கே? 2013-ல் திருமணம் நடந்த போது அந்த ரசீதை தந்திருக்கலாமே?

மவுனமாக இருக்கும் போது அதிகப்படியான பொய்கள் பேசப்படுகிறது என்கிறான். என்னுடைய மவுனத்தால் அதிகமாக பேசிவிட்டீர்கள். நான் ஆகப் பெரும் ஜனநாயகவாதி என்பதால் அதிகம் பேசினீர்கள். என் தம்பிகளை நான் பலியிடக் கூடாது என நினைத்ததால் வந்த பிரச்சனை. இனி எவனும் வேண்டாம்.. நானே வருவேன்.. நீ பேசு.. அதனால்தான் விஜயலட்சுமி, வீரலட்சுமியுடன் ஒரு சேர விசாரிக்கவும் சொன்னேன்.

வீரலட்சுமி, முக்தார் போன்றவர்களுக்கு என் வாழ்க்கையில் மன்னிப்பு கிடையாது. நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது உரிய சான்றுகளைத் தர வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+