"வீரலட்சுமியே வெளியே வா".. சென்னை கமிஷனர் அலுவலகத்தை கிறுகிறுக்க வைத்த சீமான் தம்பிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கே தெரியாமல் அவருடைய உணவில் கருக்கலைப்பு மாத்திரைகளை கலந்து கொடுத்து சீமான் கருவை கலைய வைத்ததாக தமிழர் முன்னேற்ற படைத் தலைவி வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநராக இருந்த போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டார் என விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

Naam Tamilar party cadres protest against Veeralakshmi at Chennai commissioner office

மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை 2013 இல் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தான் 7 முறை கருத்தரித்ததாகவும் அதை சீமான் கட்டாயப்படுத்தி கலைத்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் சீமானை கைது செய்ய வேண்டும் என கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வீரலட்சுமிக்கு நாம் தமிழர் கட்சியினர் தினமும் 100 பேராவது போன் செய்து ஆபாசமாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார். இதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டு கோயம்பேடு துணை கமிஷனரிடம் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜயலட்சுமிக்கு 7 முறை கருச்சிதைவு ஏற்படுவதற்கு சீமானே காரணம். அவர் உண்ணும் உணவில் கருச்சிதைவு மாத்திரைகளை கொடுத்து கருச்சிதைவு செய்ய வைத்துள்ளார். சீமானுக்கு எங்கெல்லாம் சொத்துகள் இருக்கின்றன என்பதற்கான ஆவணங்களை தேடி வருகிறோம். அது குறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்கப்படும்.

நான் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கிறார்கள். வளசரவாக்கம் உதவி கமிஷ்னர் கவுதமன் தலையீட்டுக்கு பிறகு வழக்கின் நகர்வு மாறுகிறது. விஜயலட்சுமி பேச்சும் வேறு திசையில் செல்கிறது. இந்த வழக்கில் நான் தலையிடக் கூடாது என உதவி ஆணையர் கவுதமன் தெரிவித்தார். மேலும் சீமானுக்கு விஜயலட்சுமி விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டால் சம்மனுக்கு ஆஜராகலாமே? இவ்வாறு வீரலட்சுமி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே அங்கு நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர்.

அப்போது அவர்கள் ஏ வீரலட்சுமியே வெளியே வா என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வீரலட்சுமியை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+