சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூத்திரன் என்றால் விலைமாது மகன் என்கிறது மனுஸ்மிருதி-ஆ.ராசா பேசியதில் என்ன தப்பு? சீமான் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: சூத்திரன் என்றால் தாசிமகன்; வேசிமகன் என்கிறது மனுஸ்மிருதி; ஆகையால் மூத்த திமுக தலைவர் ஆ.ராசா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், தமிழ் மட்டும் அல்லாது, எல்லா மாநில மொழிகளும், அனைத்து தேசிய இனங்களின் தாய் மொழியும் அழியும். அவர்களுடைய நோக்கமே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை மட்டும் முன்னிலைப்படுத்தி திணிப்பது தான். ஆங்கிலம் கூட அதில் அடங்காது.

பாஜகவுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை! சூத்திரன் விவகாரத்தில் ஆ.ராசாவின் அறச்சீற்ற பேச்சு நியாயமானது!பாஜகவுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை! சூத்திரன் விவகாரத்தில் ஆ.ராசாவின் அறச்சீற்ற பேச்சு நியாயமானது!

 புதிய கல்வி கொள்கை ஒரு மரண சாசனம்

புதிய கல்வி கொள்கை ஒரு மரண சாசனம்

புதிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை தான் தாய் மொழியைப் படிக்க முடியும். தமிழ் என்பது ஒரு பெருங்கடல். அதில் முதுகலை படிப்பு படித்து, ஆய்வு செய்கிறவர்களே சில நேரங்களில் சொற்களுக்குப் பொருள் தெரியாமல் பொழிப்புரையைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தத் தமிழ் மொழியை, வெறும் 5ஆம் வகுப்பு வரைப் படித்தால் போதுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். 'மனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கை என்பது நம் குழந்தைகளுக்கான மரண சாசனம்' என்று நான் சொல்லவில்லை, கல்வியியல் பேரறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.

 நீட் தேர்வும் கேள்விகளும்

நீட் தேர்வும் கேள்விகளும்

"18 வயதை நெருங்கும், 12ஆம் வகுப்பு வரை படித்த எங்கள் பிள்ளைகளே 'நீட்' தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், புதிய கல்விக் கொள்கை 3ஆம் வகுப்பில், 5 ஆம் வகுப்பில், 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத சொல்கிறது. இது உயர்கல்விக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். எங்கள் பிள்ளை 3ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோற்றுப்போனால் சக மாணவனை, நண்பனை, இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வார்கள்? கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியா எட்டு வயதில் தான் மாணவர்களை பள்ளியில் சேர்க்கிறது. நீங்கள் அந்த வயதில் பொதுத்தேர்வு எழுத சொல்கிறீர்கள்.

 அமைச்சர்களுக்கு தேர்வு

அமைச்சர்களுக்கு தேர்வு

மருத்துவராக, நீதிபதியாக, காவல்துறையினராக என எந்தப் பணி செய்ய வேண்டுமானாலும் தேர்வு எழுதுகிறோம். ஆனால், நாட்டை ஆளுகிற பிரதமர், முதல்வர், அமைச்சர் பெருமக்கள் என யாரும் எந்தத் தேர்வும் எழுதுவதில்லை? சமூகம், அறிவியல், இலக்கியம், வேளாண்மை, பொருளாதாரம், வரலாறு என எல்லாவற்றையும் இணைத்து ஒரு பாடத்திட்டம் உருவாக்கி, அதில் தேர்வெழுதி வென்றவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள். ஒருவேளை எல்லோருமே தேர்வாகிவிட்டால், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள். இல்லையெனில், அவர்கள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் இருக்கட்டும். ஆனால் அமைச்சர் ஆகக் கூடாது. அப்படிச் செய்தால், அறிவான தலைவர்கள் தானாக அதிகாரத்திற்கு வருவார்கள்.

 அமெரிக்க நிறுவனத்துக்கு ஏன் கொடுத்தீங்க?

அமெரிக்க நிறுவனத்துக்கு ஏன் கொடுத்தீங்க?

சட்டீஸ்கர் மாநிலத்தில் 'நீட்' தேர்வு வினாத்தாள்களை 35 லட்சத்திற்கு விற்கிறார்கள். மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சக மாணவர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு எழுதுகிறார்கள். கண்காணிப்பு ஆசிரியர் கதவின் அருகில் நின்றுக்கொண்டு, யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார். முதலில் இந்த 'நீட்' தேர்வு எதற்கு? தகுதியான மருத்துவரை உருவாக்க என்றால், அப்போது இதற்கு முன் இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவரே உருவாகவில்லையா? ஐயா மோடி அவர்களுக்கு இப்போது உடம்பு சரியில்லாமல் போனால், எந்த மருத்துவரிடம் வைத்தியம் செய்வார்? ஏற்கனவே, 'நீட்' போன்றத் தேர்வுகளை எழுதாமல் மருத்துவரானவரிடத்தில் தானே? அப்போது அவர் தரமான மருத்துவர் இல்லையா? இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள 'ப்ரோ மெட்ரிக்' என்கிற ஒரு தனியார் நிறுவனத்திற்கு என்ன அவசியம் உண்டாயிற்று? அவர்களுக்கு என்ன நேர்த்திக்கடனா? இந்த 'நீட்' தேர்வை நடத்துவதற்கு, அவர்களுக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது?

 ஆ.ராசா பேச்சு சரியே

ஆ.ராசா பேச்சு சரியே

அண்ணன் ஆ.ராசா பேசியது அவராக பேசியதில்லை. 'சூத்திரன்' என்றால் தாசி மகன், வேசி மகன் என்று பொருள். மனு ஸ்மிருதியின் அடிப்படையில் 'சூத்திரன்' என்கிற பட்டத்தை எங்கள் மீது சுமத்தி வைத்திருக்கிறார்கள். மனு தருமத்தில் எங்களைப் பற்றி இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்கிறது என்று அதை எடுத்துக் கூறுகிறார். பன்னெடுங்காலமாக இந்த இழிவைச் சுமந்து வருகிற மகன், ஒரு ஆதங்கத்தில் அதை எடுத்து பேசியதை, ஏதோ அவரே புதிதாகப் பேசிவிட்டது போலப் பழி சுமத்துகிறார்கள். இங்கு எல்லாமே மனு ஸ்மிருதியின் அடிப்படையில் தான் நடக்கிறது. 'புதிய கல்விக் கொள்கை' என்பதும் மனு ஸ்மிருதியின் அடிப்படையில் தான் வகுக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்துமே இந்திய அரசியல் சாசனத்தின் படி தான் நடக்கிறது என்றால், 'ஜெய் ஸ்ரீராம்' என்கிற கோஷம் இந்திய அரசியல் சாசனத்திலா உள்ளது? 'ஒரே நாடு; ஒரே வரி' என்பதெல்லாம் அரசியல் சாசனத்திலா இருக்கிறது?. இவ்வாறு சீமான் கேள்வி கூறினார்.

English summary
Naam Tamilar Chief Seeman has explained that on his support to Senior DMK Leader A.Raja's Hindu Shudra comments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X