மதுரை ஆதீனம் ஒரு தமிழ்த் தேசியவாதி.. நான் அவருக்கு ஃபுல் சப்போர்ட்- வரிந்து கட்டும் சீமான்
சென்னை: மதுரை ஆதீனம் ஒரு தமிழ்த் தேசியவாதி; அவர் ஏன் அரசியல் பேசக் கூடாது? என ஆதரவு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Recommended Video
மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு யார் கையில் வைத்திருக்கிறார்கள் அவரிடம் தான் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என கேள்வி கேட்கவேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று அவரே கூறுகிறார்.
கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் சொன்னால் சென்னை கமிஷனரோ, 10 கொலை தான் நடந்துள்ளது என்கிறார். ஒரு கொலை நடந்தாலும் அது கொலை தான்.
மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்வது? அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார்; அவர் அரசியல் பேசுவதில் என்ன தப்பு? மதுரை ஆதீனம் ஒரு தமிழ் தேசியவாதி. தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்த பலர் விரும்புகிறார்கள். அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் மேலும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பவில்லை முதன்மையாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது வைக்கின்ற ஊழல் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த அதிமுகவின் ஊழல் பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை?.
நடிகர் விஜய் போன்ற நடிகர்கள் நடித்த படங்கள். கர்நாடகாவில் வெளியிட விடுவதில்லை , கே ஜி எஃப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுகிறது; வெளிநாட்டுப் படங்கள் அனைத்தும் இந்தியாவில் வெற்றி பெறும்போது தமிழ் படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஒரு வார்டு உறுப்பினரை வாக்களித்து தேர்வு செய்யும் பொழுது நாட்டின் முதல் குடிமகனை மக்கள் வாக்களிக்காமல் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications