அடித்து தூக்குதே நாம் தமிழர்.. சர்ரென உயரும் வாக்கு சதவிகிதம்.. வெளியான பரபரப்பு சர்வே!
சென்னை; தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவிகிதம் எப்படி இருக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி சார்பாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் உங்கள் தொகுதியில் வெற்றிபெற போவது யார் ? என்ற கேள்விக்கு.
திமுக 43 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்.
அதிமுக 33 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 12 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 4 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு.
திமுக 42 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
அதிமுக 30 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 13 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 7 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் அடித்து தூக்குகிறது; 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் எச்.மகேந்திரனுக்கு கிடைத்தது. அங்கே நாம் தமிழர் 84,855 வாக்குகளைப் பெற்றது. அதேபோல் V. ஜெயின்டீன் கன்னியாகுமரி தொகுதியில் 17,069 வாக்குகளைப் பெற்றார். 2019 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் மொத்தம் 1,645,185 வாக்குகளைப் பெற்றது. மாநிலத்தில் பதிவான 42,083,544 வாக்குகளில் 3.909 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் பெற்றது.
தந்தி டிவி கணிப்பில் இந்த முறை நாம் தமிழர் 8 சதவிகிதம் பெறும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019 தேர்தல்:
திமுக கூட்டணி 53.15%
திமுக 33.52%
காங்கிரஸ் 12.61%
அதிமுக கூட்டணி 30.57%
அதிமுக 19.39%
பாஜக 3.66%
பாமக 5.36%
தேமுதிக 2.16%
நாம் தமிழர் கட்சி 3.90%
பிரதமர் வேட்பாளர்: தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுவே ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு வாக்களிக்க விரும்பும் நபர்களின் சதவிகிதம் 27 சதவிகித்தில் இருந்து கடந்த 10 மாதங்களாக உயர்ந்து உயர்ந்து 33 ஆக மாறி உள்ளது.
அதுவே ராகுல் காந்திக்கு 71 சதவிகிதம் பேர் 10 மாதங்களுக்கு முன் ஆதரவு அளிக்க முன்வந்தனர். அது தற்போது 65 சதவிகிதம் ஆக உள்ளது.
அதேபோல் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியில் அமைக்கும் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 56 சதவிகிதம் பேர் பாஜக ஆட்சி அமைக்காது என்று கூறியுள்ளனர். இவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அல்லது எதிர்க்கவும் இல்லை. ஆனால் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications